யாழ்ப்பாணத்தில் தனது உருவப்படத்திற்கு இடப்பட்டிருந்த காலணி மாலையை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தானே வந்து அகற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலிமையகம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்இ தெல்லிப்பழை வைத்தியசாலை விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா ராமநாதன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கடும் வாய்த்தர்க்கத்தை அடுத்தேஇ அர்ச்சுனாவின் உருவப்படத்திற்கு இவ்வாறான காலணி மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்துஇ பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பதாகையை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவே நேரில் வந்து அகற்றிய காணொளியும் வெளியாகியுள்ளது

