சர்ரென குறைந்த தங்கம் விலை..!! வெள்ளி விலையும் தடாலடியாக சரிந்ததால் மக்கள் மகிழ்ச்சி..!!
தமிழ்நாடு மக்களுக்கு நற்செய்தியாக இன்றைய தினம் தங்கத்தின் விலை பெருமளவு குறைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் இன்றைய தினம் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் சென்றிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த திங்கட்கிழமை வரை ஏற்றத்துடனே காணப்பட்டது தங்கம் விலை செவ்வாய்க்கிழமை முதல் படிப்படியாக விலை குறைந்து இன்றைய தினம் தடாலடியாக விலை சரிவை சந்தித்தது.
திங்கட்கிழமை அன்று தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 14,070 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை அடுத்து செவ்வாய்க்கிழமை கிராமுக்கு10 ரூபாய் விலை குறைந்தது புதன்கிழமை 30 ரூபாயும் வியாழக்கிழமை ஆன நேற்று கிராமுக்கு 80 ரூபாயும் விலை சரிவடைந்தது. இன்றைய தினம் ஒரு கிராமுக்கு 380 ரூபாய் விலை குறைந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் நேற்று 13,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் ஆபரண தங்கம் இன்று 380 ரூபாய் விலை குறைந்து 13,570 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சவரன் தங்கம் 3,040 ரூபாய் விலை சரிவடைந்து 1,10,000 ரூபாய்க்கு கீழ் சென்றிருக்கிறது. தமிழ்நாட்டில் இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 1,8,560 ரூபாயாக இருக்கிறது. இன்றைய தினத்தில் தமிழ்நாட்டில் நீங்கள் ஒரு சவரன் தங்க நகை வாங்குவீர்கள் என்றால் செய்கூலி , ஜிஎஸ்டி உள்ளிட்டவை சேர்த்து 1.25 லட்சம் ரூபாய் நீங்கள் செலவிட வேண்டி இருக்கும்.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 24 கேரட் தங்கம் விலையும் குறைந்திருக்கிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 414 ரூபாய் விலை குறைந்து 14,804 ரூபாய்க்கும், 10 கிராம் தங்கம் 4,140 ரூபாய் விலை குறைந்து 1,48,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் கிராமுக்கு 310 ரூபாய் விலை குறைந்து 11,350 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 2,480 ரூபாய் விலை குறைந்து 90,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரண தங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி இன்று வரையிலான இந்த நான்கு வர்த்தக நாட்களில் மட்டும் ஒரு கிராமுக்கு 500 ரூபாயும் ஒரு சவரனுக்கு 4,000 ரூபாயும் விலை சரிவடைந்து இருக்கிறது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று தடாலடியாக குறைந்து இருக்கிறது. சென்னையில் இன்றைய தினம் ஒரு கிராம் வெள்ளி 15 ரூபாய் விலை குறைந்து 255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 15,000 ரூபாய் விலை குறைந்து 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. திங்கள்கிழமை முதல் இன்று வரையிலான நாட்களில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 25 ரூபாயும் ஒரு கிலோவுக்கு 25,000 ரூபாயும் சரிவடைந்து இருக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
