• Login
Friday, June 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வட்டுவாகால் விகாரைக்குக் கீழே பெரிய புதைகுழி…! ரவிகரன் எம்.பி. அதிர்ச்சித் தகவல்

GenevaTimes by GenevaTimes
June 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வட்டுவாகால் விகாரைக்குக் கீழே பெரிய புதைகுழி…! ரவிகரன் எம்.பி. அதிர்ச்சித் தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முல்லைத்தீவு – வட்டுவாகால் விகாரைக்குக் கீழே அகழ்வுகளை மேற்கொண்டால், இந்தச் செம்மணியை விடவும் பல மடங்கு பெரியதொரு மனிதப் புதைகுழி அடையாளம் காணப்படும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.  

“செம்மணி மனிதப் புதைகுழியில் இலங்கையின் மிகப்பெரிய மனிதப் பேரவலத்தின்
சாட்சியாக உருவெடுத்திருக்கும் நிலையில், இதற்குச் சர்வதேச நாடுகளும் இலங்கை
அரசும் என்ன பதிலைக் கூறப்போகின்றன துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் மற்றும் வடக்கு, கிழக்கில் உள்ள ஏனைய
புதைகுழிகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்
மேற்கண்டவாறு கூறினார்.

தமிழ் இனத்தின் மீதான திட்டமிட்ட அழிவு

அவர் மேலும் தெரிவித்ததாவது,
“எங்களுடைய தமிழ் இனத்தின் மீதான திட்டமிட்ட அழிவுகளை இலங்கை அரசினுடைய
ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தொடர்ச்சியாகச் செய்துகொண்டே வந்திருக்கின்றார்கள்.

வட்டுவாகால் விகாரைக்குக் கீழே பெரிய புதைகுழி...! ரவிகரன் எம்.பி. அதிர்ச்சித் தகவல் | Huge Mass Grave Under Vattuvakal Buddist Vihara

ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் எமது இனத்தை வன்முறையாக அழித்தமைக்கான அசைக்க
முடியாத சாட்சிகள், இயற்கையின் நீதியால் தற்போது ஒவ்வொன்றாக வெளியே
வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன.



செம்மணியில் தற்போதைய அகழ்வுகளின் மூலம் வெளிவரும் உண்மைகள் உலகத்தையே
உலுக்கியுள்ளன.

தமிழர் தாயகப் பகுதிகளில் இன்னும் எத்தனையோ இடங்களில் இவ்வாறான
மனிதப் புதைகுழிகள் இரகசியமாக மூடிமறைக்கப்பட்டுள்ளன.

அவற்றை முறையாகத்
தோண்டத் தொடங்கினால், இன்னும் பேரதிர்ச்சியைத் தரும் வகையிலான மனித என்புக்
குவியல்கள் தொடர்ச்சியாகக் கிடைத்துக்கொண்டே இருக்கும்.



குறிப்பாக, முல்லைத்தீவு வட்டுவாகால் பகுதியில் அமைந்துள்ள விகாரைக்குக் கீழே
அகழ்வுகளை மேற்கொண்டால், செம்மணியை விட மிகப்பெரியதொரு மனிதப் புதைகுழி
வெளிச்சத்துக்கு வரும். இதற்காக அந்த விகாரையை உடைத்துத்தான் அகழ்வுப் பணிகளை
முன்னெடுக்க வேண்டும் என்பதில்லை.

பாரிய மனிதப் புதைகுழிகள் 

தற்கால நவீன தொழில்நுட்பக் கருவிகளைப்
பயன்படுத்தி, ‘ஸ்கேன்’ செய்வதன் மூலமே அங்கு நிலத்தடியில் எத்தனை
ஆயிரக்கணக்கான என்புத் தொகுதிகள் புதைக்கப்பட்டுள்ளன என்பதைத் துல்லியமாக
ஆராய்ந்து அறிய முடியும்.


இதேபோல், கேப்பாப்பிலவு போன்ற இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த மற்றும்
இருக்கின்ற பல இடங்களில் பாரிய மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் என அப்பகுதி
மக்கள் இன்றும் பலத்த அச்சத்துடன் இருக்கின்றார்கள்.

வட்டுவாகால் விகாரைக்குக் கீழே பெரிய புதைகுழி...! ரவிகரன் எம்.பி. அதிர்ச்சித் தகவல் | Huge Mass Grave Under Vattuvakal Buddist Vihara



வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பெரும்பாலான இடங்களில் அப்பாவிப்
பொதுமக்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, கூட்டங்கூட்டமாகப்
புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சந்தேகத்துக்குரிய அந்த மனிதப் புதைகுழிகள்
அனைத்தும் சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் முழுமையாகத் தோண்டப்பட்டு விசாரணைகள்
நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் நேரடியாகத் தலையிட்டு,
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குப் பாரபட்சமற்ற நீதியைப் பெற்றுத்தர வேண்டும்
என்பதே எங்களின் பிரதான எதிர்பார்ப்பாகும் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

“நடன காட்சிகளை விட சண்டை காட்சிகள் சுலபமானது”- நடிகை சமந்தா பேச்சு | Makkal Osai

Next Post

இஸ்ரேல் குட்டையை குழப்பியது.. 24 மணி நேரத்தில் ஒப்பந்தம் கிழிந்தது!கடுப்பில் டிரம்ப்! | Iran Suspends US Talks Just 24 Hours After Signing Deal as Israel Attacks Lebanon

Next Post
இஸ்ரேல் குட்டையை குழப்பியது.. 24 மணி நேரத்தில் ஒப்பந்தம் கிழிந்தது!கடுப்பில் டிரம்ப்! | Iran Suspends US Talks Just 24 Hours After Signing Deal as Israel Attacks Lebanon

இஸ்ரேல் குட்டையை குழப்பியது.. 24 மணி நேரத்தில் ஒப்பந்தம் கிழிந்தது!கடுப்பில் டிரம்ப்! | Iran Suspends US Talks Just 24 Hours After Signing Deal as Israel Attacks Lebanon

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin