• Login
Thursday, June 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘கொளத்தூரில் விஜய் 5 நிமிடம் பேசியதற்கே ஸ்டாலின் தோற்றார்’.. ஆதவ் அர்ஜுனா பேச்சு | “MK Stalin lost in Kolathur just because Vijay spoke for five minutes” : Aadav Arjuna’s remarks

GenevaTimes by GenevaTimes
June 18, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
‘கொளத்தூரில் விஜய் 5 நிமிடம் பேசியதற்கே ஸ்டாலின் தோற்றார்’.. ஆதவ் அர்ஜுனா பேச்சு | “MK Stalin lost in Kolathur just because Vijay spoke for five minutes” : Aadav Arjuna’s remarks
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Velmurugan P

Time
Published: Thursday, June 18, 2026, 22:29 [IST]

சென்னை: தமிழக முதல்வர் விஜய் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது கொளத்தூரில் 5 நிமிடங்கள் தான் பேசினார்.. அதற்கே உங்கள் தலைவர் (ஸ்டாலின்) தோல்வி அடைந்தார்.. எப்போ பேசணும்னு எங்க தலைவருக்கு தெரியும்.. அவர் ஐந்து நிமிடம் பேசுனதுக்கே 75 வருட கட்சி 59 தொகுதிகளுக்கு வந்து விட்டது.. மீண்டும் பேசினால் ஜீரோ ஆகிவிடும்..” என பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகவை விமர்சித்துள்ளார்.

தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளரும். பொதுப்பணித்துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவகலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருப்பார்கள். அந்த பேட்ஜில் வாயை திறங்க சிஎம் என்று இருக்கும். நாங்கள் அதனை இன்று கண்டுகொள்ளவே இல்லையே.. திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எல்லாம் நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.. பர்மிஷன் கொடுக்க விஜய்யின் பிரச்சாரத்தை ஓராண்டாக முடக்கியது உங்கள் எல்லாருக்கும் தெரியும்.

MK Stalin lost in Kolathur just because Vijay spoke for five minutes Aadav Arjuna s remarks

கடைசி 15 நாளில் 8 ஊர்களுக்குத்தான் வந்தார் என்றும் உங்களுக்கு தெரியும்.. விஜய் எட்டு ஊர் வந்து, எட்டு தடவை தான் பேசினார். அதற்கே திமுக 59 தொகுதிகளாக சுருங்கிவிட்டது. கொளத்தூர் விஜய் வெறும் ஐந்து நிமிடம் பேசியதற்கே திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியை தழுவினார். எனவே எப்போது பேச வேண்டும் என்று எங்கள் தலைவர் விஜய்க்கு தெரியும். எப்போது பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் அவருக்கு தெரியும். எந்த பிரச்சனையை மக்களிடம் சொல்ல வேண்டும் என்றும் தலைவருக்கு தெரியும்.

சென்னை ஐடி என்ஜினீயர் டூ திண்டுக்கல் விவசாயி.. அரசு ஊழியர்களை ஆடிப்போக வைத்த சம்பவம்

சென்னை ஐடி என்ஜினீயர் டூ திண்டுக்கல் விவசாயி.. அரசு ஊழியர்களை ஆடிப்போக வைத்த சம்பவம்

எங்கள் தலைவர் விஜய் வாயை திறந்து பேசியதற்கே, 200 சீட் ஜெயிக்கும் என்று சொன்ன 75 வருட திமுக, 59 தொகுதியுடன் சுருங்கிவிட்டது. திரும்பவும் பேசும் போது, அடுத்த இடைத்தேர்தலில் பூஜியத்தில் நிற்பார்கள்( இடைத்தேர்தலில் திமுக எங்குமே ஜெயிக்காது). அடுத்து உள்ளாட்சி தேர்தலிலும் ஜெயிக்க மாட்டார்கள்.. இதுதான் எங்கள் தலைவரின் பேச்சின் வலிமை… உங்களை போல் தினமும் காலையில் வந்து பேட்டி கொடுப்பது, மதியம் பேட்டி கொடுப்பது, இரவில் பேட்டி கொடுப்பது, அறிக்கை கொடுப்பது என இருக்கிறார்கள்.

ஆனால் ஆளும் கட்சியாக இருக்கும் போது உதயநிதி ஸ்டாலின் இப்படி அடிக்கடி பேட்டிக்கொடுத்து பார்த்து உள்ளீர்களா.. ஸ்டாலின் இப்படி அடிக்கடி பேட்டி கொடுத்து பார்த்துள்ளீர்களா.. அறிக்கை கொடுத்து பார்த்துள்ளீர்களா.. ஆனால் இப்போது மட்டும் வெறும் அறிக்கையாக வந்து கொண்டே இருக்கிறது. எதோ 30 வருடங்களாக நாம் எதோ ஆளும் கட்சியாக இருந்தது போல் , எங்கள் தலைவரின் தாத்தா, அப்பா முதல்வராக இருந்தது போல் விமர்சிக்கிறார்கள்.. ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. பெண்கள் பாதுகாப்பிற்கு எங்கள் தலைவர் கடுமையான விதிகளை உருவாக்கி வருகிறார்..

சாதி வாரி கணக்கெடுப்பு.. விஜய்யை பாராட்டும் பாமக... பச்சோந்தித்தனம் என விமர்சிக்கும் திமுக

சாதி வாரி கணக்கெடுப்பு.. விஜய்யை பாராட்டும் பாமக… பச்சோந்தித்தனம் என விமர்சிக்கும் திமுக

இன்று காலை ஒரு ட்வீட் பாஜக மாநில தலைவர் நயினார் போட்டார். உங்கள் கட்சிக்காரர் தவறு செய்துவிட்டதாக விமர்சித்தார். அவருக்கு பதில் அளிக்கிறேன்.. தவெகவை பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் உடனே சேர்ந்துவிட முடியும். அப்படி சேர்ந்தவர்களில் யாராவது தவறு செய்ததாக காவல்துறையில் தகவல் வந்தால், உடனே அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.

English summary

“Tamil Nadu Chief Minister Vijay spoke for just five minutes in Kolathur during the Assembly election campaign, and that alone caused your leader (Stalin) to lose. Our leader knows exactly when to speak; his five-minute speech reduced a 75-year-old party to just 59 constituencies. If he speaks again, they will be reduced to zero,” said Public Works Minister Aadav Arjuna, criticizing the DMK.

Read More

Previous Post

ஃபோர்க்லிஃப்ட் பழுதுபார்க்கும் விபத்தில் பட்டறை உரிமையாளர் உயிரிழந்தார் | Makkal Osai

Next Post

2026-ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் 388 பாலியல் தொல்லை வழக்குகள் பதிவு – Malaysiakini

Next Post

2026-ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் 388 பாலியல் தொல்லை வழக்குகள் பதிவு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin