• Login
Thursday, June 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சச்சினுக்கு நோ.. விராட் கோலிக்கு எஸ்! பிராட்டின் ‘டெஸ்ட் 11’ அணியில் இடம் பிடித்த ஒரே ஒரு இந்தியர் | Sachin Tendulkar: Not Sachin Tendulkar! Stuart Broad Picks Virat Kohli as Only Indian in His Ultimate Test XI

GenevaTimes by GenevaTimes
June 18, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
சச்சினுக்கு நோ.. விராட் கோலிக்கு எஸ்! பிராட்டின் ‘டெஸ்ட் 11’ அணியில் இடம் பிடித்த ஒரே ஒரு இந்தியர் | Sachin Tendulkar: Not Sachin Tendulkar! Stuart Broad Picks Virat Kohli as Only Indian in His Ultimate Test XI
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Updated: Thursday, June 18, 2026, 21:09 [IST]

மும்பை: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் மற்றும் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஸ்டூவர்ட் பிராட், தனது ‘ஆல்-டைம் டெஸ்ட் லெவன்’ அணியை அறிவித்துள்ளார். ஸ்டூவர்ட் பிராட்டின் ஆல் டைம் லெவன் தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

சர்வதேச கிரிக்கெட்டின் மாபெரும் ஜாம்பவான்களைக் கொண்டு அவர் உருவாக்கியுள்ள இந்த கனவு அணியில், கிரிக்கெட் உலகின் ‘கடவுள்’ என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு இடம் கிடைக்கவில்லை. மாறாக, தற்கால கிரிக்கெட்டின் ரன் மெஷின் விராட் கோலியைத் தனது அணியின் ஒரே ஒரு இந்திய வீரராக ஸ்டூவர்ட் பிராட் தேர்வு செய்துள்ளார்.

Sachin Tendulkar

லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் அதிகாரப்பூர்வ நேர்காணலில், தான் யாருடன் அல்லது யாருக்கு எதிராக நேருக்கு நேர் களம் கண்டாரோ, அவர்களிலிருந்து மட்டுமே இந்த அசாத்திய அணியை உருவாக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பிராட் தனது வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

ஸ்டூவர்ட் பிராட் தேர்வு செய்துள்ள இந்த ஆல் டைம் லெவன் அணியில், இந்தியாவின் சார்பில் இடம் பெற்றுள்ள ஒரே ஒரு நபர் விராட் கோலி மட்டுமே தான். நவீன கால கிரிக்கெட்டில் விராட் கோலியின் அசாத்திய பேட்டிங் ஆளுமை, டெஸ்ட் போட்டிகளில் அவரது ரன் குவிக்கும் வேகம் மற்றும் அணியை வழிநடத்திய ஆக்ரோஷமான விதம் ஆகியவற்றைக் பாராட்டியே பிராட் இந்த முடிவை எடுத்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கருக்கு எதிராகப் போதிய அளவில் விளையாட வாய்ப்பு கிடைக்காத சூழலில், தனது சமகாலத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேனான கோலியைத் தனது அணியின் மிடில் ஆர்டரை (4-வது வரிசை) பலப்படுத்த பிராட் தேர்வு செய்துள்ளார். இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் அலஸ்டைர் குக் இந்த அணிக்கு கேப்டனாகவும், ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டூவர்ட் பிராட் தேர்வு செய்த அணி: அலஸ்டைர் குக் (இங்கிலாந்து – கேப்டன்), மேத்யூ ஹெய்டன் (ஆஸ்திரேலியா), ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா), விராட் கோலி (இந்தியா), பிரையன் லாரா (மேற்கிந்திய தீவுகள்), ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா), மாட் பிரையர் (இங்கிலாந்து – விக்கெட் கீப்பர்), சர் ரிச்சர்ட் ஹாட்லி (நியூசிலாந்து), ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா – துணைக் கேப்டன்), கிளென் மெக்ராத் (ஆஸ்திரேலியா), ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து)

விக்கெட் கீப்பர் இடத்திற்கு ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற ஜாம்பவான்கள் இருந்தபோதிலும், பிராட் தனது சக நாட்டைச் சேர்ந்த மாட் பிரையரைத் தேர்வு செய்துள்ளார். சச்சினைத் தவிர்த்து விராட் கோலியைத் தேர்ந்தெடுத்த பிராட்டின் இந்த அணிப் பட்டியல் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் டேல் ஸ்டெய்ன், ராகுல் டிராவிட் ஆகியோரின் பெயர்களும் தேர்வு செய்யப்படவில்லை.

English summary

Sachin Tendulkar: Not Sachin Tendulkar! Stuart Broad Picks Virat Kohli as Only Indian in His Ultimate Test XI

Read More

Previous Post

16ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பம் என்கிறார் தெங்கு ஜஃப்ருல் | Makkal Osai

Next Post

PM Kisan | விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! பி.எம். கிசான் திட்டத்தின் 23வது தவணை விடுவிப்பு தேதி அறிவிப்பு! | வணிகம் போட்டோகேலரி

Next Post
PM Kisan | விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! பி.எம். கிசான் திட்டத்தின் 23வது தவணை விடுவிப்பு தேதி அறிவிப்பு! | வணிகம் போட்டோகேலரி

PM Kisan | விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! பி.எம். கிசான் திட்டத்தின் 23வது தவணை விடுவிப்பு தேதி அறிவிப்பு! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin