2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கைதுக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ரோஹந்த அபயசூரிய மற்றும் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, முன்னாள் ஜனாதிபதி சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, தமது வாய்மூல சமர்ப்பணங்களை முன்வைக்கத் தொடங்கினார்.

