Last Updated:
முதலீட்டாளர்கள் போலி இணையதளங்களில் பணத்தை இழந்து ஏமாற வேண்டாம்.
போலி வர்த்தக தளங்களில் சிக்கினால் இழப்பீடு இல்லை என்று செபி மீண்டும் எச்சரித்துள்ளது.
பட்டியலிடப்படாத நிறுவனங்களின் பங்குகளை வர்த்தகம் செய்ய அனுமதிக்கும் அங்கீகாரமற்ற வர்த்தக தளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் குறித்து செபி எச்சரித்துள்ளது. ஏற்கனவே, கடந்த 2014 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் எச்சரித்த செபி, தற்போது அதிகரித்து வரும் போலி வர்த்தக தளங்கள், ஆன்லைன் பேன்டஸி கேம்கள் மற்றும் பதிவு செய்யப்படாத கடன் பத்திர தளங்கள் குறித்து மீண்டும் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, செபி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலீட்டாளர்கள் அங்கீகாரமற்ற இணையதளங்கள் மற்றும் செயலிகளை பயன்படுத்த வேண்டாம். இதில் ஏற்படும் இழப்புகள் அல்லது ஏமாற்றங்களுக்கு செபியின் முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டம், குறைதீர்ப்பு மையங்கள் மூலமாக எந்தவொரு சட்டப்பூர்வ தீர்வோ அல்லது இழப்பீடோ கிடைக்காது.

