• Login
Wednesday, June 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டி20 உலகக்கோப்பையில் இமாலய சாதனை! மிதாலி ராஜை முந்தி ‘ரன் மெஷின்’ ஸ்மிருதி மந்தனா புதிய வரலாறு | Smriti Mandhana: Smriti Mandhana Scripts History, Surpasses Elite Record for Most Half-Centuries by an Indian in T20 World Cups

GenevaTimes by GenevaTimes
June 17, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
டி20 உலகக்கோப்பையில் இமாலய சாதனை! மிதாலி ராஜை முந்தி ‘ரன் மெஷின்’ ஸ்மிருதி மந்தனா புதிய வரலாறு | Smriti Mandhana: Smriti Mandhana Scripts History, Surpasses Elite Record for Most Half-Centuries by an Indian in T20 World Cups
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Wednesday, June 17, 2026, 22:45 [IST]

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மகளிர் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். சர்வதேச டி20 உலகக்கோப்பை தொடர்களில், இந்திய அணியின் சார்பில் அதிக அரைசதங்களை குவித்த வீராங்கனை என்ற வரலாற்றுப் பெருமையை ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த நிலையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி களமிறங்கியது.

Smriti Mandhana

இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக ஸ்மிருதி மந்தனா – ஷஃபாலி வர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இருவருமே அதிரடியாக ரன்களை விளாசிய நிலையில், முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்க்கப்பட்டது. சிறப்பாக ஆடிய ஷஃபாலி வர்மா 38 பந்துகளில் 10 பவுண்டரிகள் உட்பட 55 ரன்களை விளாசினார்.

மறுபக்கம் அதிரடியாக ஸ்மிருதி மந்தனா 36 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா அடிக்கும் 36வது அரைசதம் இதுவாகும். டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீராங்கனைகளில் ஸ்மிருதி மந்தனா முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு பின் பெத் மூனி 30 அரைசதங்களுடன் 2வது இடத்தில் இருக்கிறார்.

அதேபோல் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் அதிக அரைசதங்கள் விளாசிய இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். இதுவரை டி20 உலகக்கோப்பையில் மிதாலி ராஜ் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலா 5 அரைசதங்கள் விளாசி முதலிடத்தில் இருந்தனர். அதனை ஸ்மிருதி மந்தனா 6 அரைசதங்களுடன் முறியடித்துள்ளார்.

சிறப்பாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 47 பந்துகளில் 1 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 74 ரன்களை விளாசி அசத்தினார். ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் ஸ்மிருதி மந்தனா அசத்தல் அரைசதத்தை அடித்திருந்தார். அடுத்தடுத்த போட்டிகளில் அரைசதம் விளாசிய இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி இருக்கிறார். இதனால் ஸ்மிருதி மந்தனாவின் ஆட்டம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

English summary

Smriti Mandhana: Smriti Mandhana Scripts History, Surpasses Elite Record for Most Half-Centuries by an Indian in T20 World Cups

Read More

Previous Post

அமெரிக்க அகதிகள் முகாம்களில் கொத்துக் கொத்தாக மடியும் கைதிகள்!

Next Post

வரலாற்று உச்சத்தில் இந்தியப் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 77,000, நிஃப்டி 24,000 – முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன? | Indian Stock Market Hits Record High: Sensex Crosses 77,000 And Nifty Touches 24,000 In 2026

Next Post
வரலாற்று உச்சத்தில் இந்தியப் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 77,000, நிஃப்டி 24,000 – முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன? | Indian Stock Market Hits Record High: Sensex Crosses 77,000 And Nifty Touches 24,000 In 2026

வரலாற்று உச்சத்தில் இந்தியப் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 77,000, நிஃப்டி 24,000 - முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன? | Indian Stock Market Hits Record High: Sensex Crosses 77,000 And Nifty Touches 24,000 In 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin