Last Updated:
ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி தொடர்ந்து 7-வது முறையாக கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸில் G7 நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து கைகுலுக்கினார்.
ஏவியான்-லெ-பெய்ன்ஸ் நகரில் நடந்த 52ஆவது G7 மாநாட்டு அரங்குக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை, பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவல் மேக்ரான் கைகுலுக்கி ஆரத்தழுவி வரவேற்றார். மாநாட்டு அரங்கிற்குள் பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சந்தித்தனர். அப்போது இருவரும் கைகுலுக்கிக் கொண்டதோடு, அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியின் தோளைத் தட்டி தனது நட்பை வெளிப்படுத்தினார்.
பின்னர், புதிய கூட்டாண்மைகளை உருவாக்குதல் மற்றும் சர்வதேச ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்புதல் என்ற தலைப்பிலான அமர்வில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதைத் தொடர்ந்து ஜி7 உச்சி மாநாட்டின் இரண்டாம் நாளையொட்டி உலகத் தலைவர்கள் பாரம்பரிய முறைப்படி குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்டோருடன் முதல் வரிசையில் பிரதமர் மோடி இடம்பிடித்திருந்தார். ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பது இது 13-வது முறையாகும். மேலும், அவர் தொடர்ந்து 7-வது முறையாக இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Jun 17, 2026 11:09 AM IST


