சங்கீதா வசிக்க உரிமை கோரும் முதலமைச்சர் விஜய்-இன் நீலாங்கரை இல்லத்தின் மதிப்பு என்ன?
தமிழக முதலமைச்சரும் தவெக கட்சி தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு தான் இன்றைக்கு டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறது. தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் கடந்த டிசம்பரில், சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
சங்கீதா தாக்கல் செய்த மனுவில், கணவர் விஜய்க்கு இன்னொரு நடிகையுடன் தொடர்பு இருக்கிறது என குற்றம்சாட்டி இருந்தார். கணவர் விஜயிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும், ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமையும் வழங்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு தொடுத்த போது விஜய் கட்சி தலைவராக மட்டுமே இருந்தார் தற்போது அவர் மாநில முதலமைச்சராக இருக்கிறார். விஜய், சங்கீதா ஆகிய இருவரும் பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதன்படி, இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போதும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர்.
ஆனால் இருவரின் மனுவையும் செங்கல்பட்டு நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், வீடியோ கான்பரன்ஸ் விசாரணைக்கு தேவையான இ-மெயில் முகவரி உள்ளிட்ட ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தனக்கு நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதி வேண்டும் என்பது சங்கீதாவின் முக்கியமான கோரிக்கையாக உள்ளது. இதனால் விஜய்யின் நீலாங்கரை இல்லம் மீண்டும் கவனம் பெறும் விஷயமாக மாறி இருக்கிறது. நீண்ட காலமாக விஜய் வசிப்பது இந்த நீலாங்கரை வீட்டில் தான்.

விஜய் நீலாங்கரை இல்லம் கடற்கரைக்கு அருகே அமைந்திருக்கிறது. ஒரு முறை வெளிநாட்டிற்கு சென்ற போது ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் இல்லத்தைப் பார்த்து அதைப் போலவே தானும் கட்ட வேண்டும் என நீலாங்கரையில் உள்ள வீட்டை அவர் வடிவமைக்க கூறினாராம். விஜயின் வீட்டுக்குள் ஹால் பகுதி பிரம்மாண்டமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
வீட்டுக்குள்ளேயே ஒரு பிரைவேட் ஜிம் மற்றும் நீச்சல் குளம் ஆகியவை இருக்கின்றன. இது தவிர பசுமை நிறைந்ததாக வீட்டை சுற்றி தோட்டம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த வீட்டின் சொத்து மதிப்பு சுமார் 80 கோடி வரை இருக்கலாம் என சொல்லப்படுகிறது. பெரிய ஆடம்பரம் இல்லாமல் எளிமையான வீடாகவே இருக்கும் என அங்கே சென்று வந்தவர்கள் கூறுகின்றனர். பல இடங்களில் கண்ணாடிகளால் செய்யப்பட்ட பேனல்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
அதிக அளவு சூரிய வெளிச்சம் வந்து செல்லக்கூடிய வகையில் இந்த வீடு கட்டப்பட்டிருக்கிறது. விஜய் எப்படி எளிமையாகவும் அமைதியாகவும் இருக்கிறாரோ அவருடைய குணாதிசயத்திற்கு ஏற்ப எளிமையாகவும் அமைதியாகவும் இயற்கையை ரசிக்கக் கூடிய வகையிலும் இந்த வீடு கட்டப்பட்டிக்கிறதாம். இந்த வீட்டில் இருந்து தினமும் கடல் அழகை கண்டு ரசிக்க முடியும்.

