Last Updated:
மிதிவண்டிகளை பிரபலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த சாதனைகள், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.
லண்டனில் நடைபெற்ற மிதிவண்டி பந்தயத்தில் செயற்கை கால்களுடன் உயரமான மிதிவண்டியை இயக்கியது உட்பட நான்கு கின்னஸ் சாதனைகள் படைக்கப்பட்டன.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் புகழ்பெற்ற நக்டர்ன் (Nocturne) மிதிவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில், பென்னி-ஃபார்திங் கிளப்பின் நிறுவனர் நீல் லாட்டன், பெடல்களை எட்டுவதற்காகத் தனது கால்களில் செயற்கைக் கால்களைப் பொருத்திக்கொண்டு, மிகப்பெரிய பென்னி-ஃபார்த்திங் மிதிவண்டியை ஓட்டி சாதனை படைத்தார். சகோதரர்களான ஃப்ளோ (Flo) மற்றும் ஃபின் உட்வார்ட் (Finn Woodward) ஆகியோர் மிகச்சிறிய பென்னி-ஃபார்த்திங் மிதிவண்டியை ஓட்டி சாதனை படைத்தனர்.
மற்றொரு வீரரான ரோஜர் டேவிஸ், கண்களைக் கட்டிக்கொண்டு ஒற்றைச் சக்கர மிதிவண்டியில் 100 மீட்டர் தூரத்தை அதிவேகமாகக் கடந்து சாதனை புரிந்தார். 19-ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட பென்னி-ஃபார்திங் எனப்படும் மிகப் பெரிய பின் சக்கரமும் மிகச் சிறிய முன் சக்கரமும் கொண்ட மிதிவண்டிகளை பிரபலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பென்னி-ஃபார்திங் கிளப்பின் இந்த சாதனைகள் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.
Jun 15, 2026 11:22 AM IST


