Last Updated:
இச்சம்பவத்தில் தரையில் மோதி சம்பவ இடத்திலேயே மரியா உயிரிழந்தார்.
இன்ஸ்டாகிராமிற்காக Bungee Jump செய்ய சென்ற 21 வயது இளம் பெண் தற்போது உயிரோடு இல்லை.
மரியா எடுவார்டா என்ற உடற்கல்வி பட்டதாரிப் பெண், பிரேசிலின் சா போலோவில் உள்ள Skeleton Bridge என்ற இடத்துக்கு சாகசம் செய்ய சென்றார். Bungee Jump எனப்படும் சாகச விளையாட்டில் அவர் ஈடுபட முயன்றார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் இருவர் மரியாவை தூக்கிச் சென்று சுமார் 130 அடி உயர பள்ளத்தில் வீசினர்.
பிரேசிலில் Bungee jump-ன் போது பாதுகாப்பு கயிறு கட்டாமல், 40 அடி உயர பாலத்தில் இருந்து இளம்பெண் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சிக் காட்சி; ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த 21 வயது பெண்…. #Brazil #Bungeejump #safetyrope #News18Tamilnadu
▶️Watch Live | https://t.co/4tgGWSqe3O pic.twitter.com/399Kl39Xl4— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 14, 2026
அப்போதுதான், அவர்கள் பாதுகாப்புக்கான கயிறை மரியா உடலில் கட்டாதது தெரியவந்தது. இச்சம்பவத்தில் தரையில் மோதி சம்பவ இடத்திலேயே மரியா உயிரிழந்தார். மேலும் இதை நேரில் பார்த்த மரியாவின் வருங்கால கணவர் அதிர்ச்சியில் மயக்கமடைந்தார்.
இந்த விபத்து நடப்பதற்குச் சற்று முன்பாகவே மரியா அந்த சாகசப் பகுதியிலிருந்து சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். மேலும், பாலத்தில் இருந்து கீழே குதிக்க எனக்கு அனுமதி கொடுத்த அந்த லூசு யாரு? என்று அவர் நகைச்சுவையாக ஒரு கேள்வியையும் எழுதியிருந்தார். மரியா தற்போது உயிரிழந்த நிலையில் அவர் பகிர்ந்த இந்த கடைசிப் பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Jun 15, 2026 11:33 AM IST
பிரேசில்: பாதுகாப்பு கயிறு இல்லாமல், 40 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்!


