ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேல் தப்பு கணக்கு போட்டு விட்டதாக ஈரான் ஜனாதிபதி பெசஷ்கியான் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிரான போர் முதல் ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, ஈரான் ஜனாதிபதி பெசஷ்கியான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது;
தாக்குதல்களின் தாக்கத்தை தவறாகக் கணக்கிட்ட இஸ்ரேல்
ஈரான் மீதான தனது தாக்குதல்களின் தாக்கத்தை இஸ்ரேல் தவறாகக் கணக்கிட்டுவிட்டது. முன்னணி இராணுவ தளபதிகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள், ஈரானை பலவீனப்படுத்தும் மற்றும் இஸ்லாமிய குடியரசை நிலைகுலையச் செய்யும் என்று இஸ்ரேல் நம்பியது.

ஈரான் மக்களின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமைதான், இஸ்ரேலை போர்நிறுத்தம் தொடர்பான நிலைப்பாட்டை எட்டச் செய்தது. ஈரான் அரசு நிர்வாகம் மக்களின் பிரச்னைகளை ஒரு நிமிடம் கூட புறக்கணிக்கவில்லை. நாட்டின் சவால்களுக்குத் தீர்வுகளைக் காணவும், இன்னல்களைக் குறைக்கவும் அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
அமெரிக்காவுடனான ஒப்பந்தம் அராக்சிக்கு எதிர்ப்பு
இதேவேளை அமெரிக்காவுடனான சாத்தியமான அமைதி ஒப்பந்தம் குறித்து ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராக்சி அளித்த விளக்கத்திற்கு பொதுமக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஈரானின் வடகிழக்கு நகரமான மஷாத்தில் உள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

