பா.ஜ.க நிர்வாகி விஜயதரணி த.வெ.கவில் இணைந்தார். அவருடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.பிக்கள் வனரோஜா, இளவரசன், ஆகியோரும் த.வெ.கவில் தங்களை நேற்று (13) இணைத்துக் கொண்டனர்.
அ.தி.மு.க, அ.ம.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பலர், சென்னை பனையூரில் உள்ள த.வெ.க அலுவலகத்திற்கு சென்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆனந்த் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அ.தி.முகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.பிக்கள் வனரோஜா, இளவரசன், பரமக்குடி முன்னாள் எம்.எல்.ஏ முருகேசன், முன்னாள் எம்.எல்.ஏ ரவி, திருநெல்வேலி முன்னாள் மேயர் புவனேஸ்வரி, வட சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் பாலகங்கா உள்ளிட்டோர் த.வெ.கவில் இணைந்தனர்
இதேபோல், பா.ஜ.கவைச் சேர்ந்தவரும், விளவங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். விஜயதரணி, திருப்பூர் பா.ஜ.க மகளிர் அணி நிர்வாகி கே. ஜெகதீஸ்வரி உள்ளிட்டோர் தவெகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
த.வெ.கவில் இணைய வருகை தந்தவர்களுக்கு, அமைச்சர் ஆனந்த் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கட்சித் துண்டை அணிவித்து கட்சியில் இணைத்துக்கொண்டனர். (a)


