எனினும், 7 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறியதால், ஆப்கானிஸ்தான் அணி 194 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியின் அறிமுக வீரர்களான குர்னூர் பிரார் மற்றும் ஹர்ஷ் துபே இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்திய அணியில், சிறப்பாக விளையாடிய கேப்டன், 84 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டார். இஷான் கிஷன் 34 ரன்களும், கடைசி நேரத்தில் கே.எல்.ராகுல் அதிரடியாக 39 ரன்களும் சேர்த்ததால், 23-வது ஓவரிலேயே இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


