Last Updated:
விமானிகளின் அணிவகுப்பு மரியாதையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் பயிற்சி முடித்த ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பார்வையிட்டார்.
டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் 9 வீராங்கனைகள், 16 நட்பு நாடுகளை சேர்ந்த 34 வீரர்கள் உட்பட 515 பேர் தங்களது பயிற்சியை நிறைவு செய்தனர். இதையொட்டி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மிடுக்குடன் அணிவகுத்தனர்.
President Droupadi Murmu reviewed the passing out parade of the 158th Regular Course and the 141st Technical Graduate Course at the Indian Military Academy, Dehradun. The President said that as Army officers, the officer cadets will be responsible for leading, guiding and caring… pic.twitter.com/cClhQ1PPMP
— President of India (@rashtrapatibhvn) June 13, 2026
அதனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ராணுவத்தில் 9 பெண்கள் இணைந்தது திருப்புமுனையான தருணம் என்று பெருமிதம் தெரிவித்தார். இதேபோன்று தெலங்கானா மாநிலம் துண்டுகல்லில் உள்ள விமானப் படை அகாடமியில் பயிற்சியை முடித்த விமானிகளின் அணிவகுப்பு மரியாதையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். தொடர்ந்து விமானப் படையினரின் கண்கவர் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.


