• Login
Saturday, June 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

செல்வம் அடைக்கலநாதனின் சுயரூபத்தை தோலுரிக்கும் சகா

GenevaTimes by GenevaTimes
June 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
செல்வம் அடைக்கலநாதனின் சுயரூபத்தை தோலுரிக்கும் சகா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் பதவி விலகல் தொடர்பில் அவருடைய செயற்பாடுகள் முன்னுக்கு பின் முரணான வகையில் அமைந்துள்ளமை குறித்து விசனமடைந்த அந்த கட்சியின்யாழ்.மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக யாழ். ஊடகமையத்தில் அவர் தெரிவித்துள்ளமை வருமாறு,

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மீது கடந்த 2025 ஆம் ஆண்டு 10 ஆம் மாதமளவில் ஒரு பெண்ணுடன் முறைகேடாக நடந்த பிரச்சனை தொடர்பாக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி இருந்தது.இதில் அவருடைய குரல் பதிவுகளே வெளியாகி இருந்தது.அந்த குரல் பதிவுகளின் அடிப்படையில் உடனடியாக கூட்டம் எமது மத்திய குழுவின் கூட்டம் கடந்த 2025 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 09 ஆம் திகதி வவுனியாவில் கூட்டப்பட்டது.

கட்சியின் தலைவரின் ஒழுக்கக்கேடு

அந்தக்கூட்டத்தில் நான் உட்பட கட்சியில் இருந்தவர்கள் ஒருகட்சியின் தலைவரின் ஒழுக்கக்கேடு தொடர்பாக பொதுவெளியில் மிக கேவலமாக பேசப்படுகிறது.ஒழுக்கக்கேடான தலைமைத்துவத்தின் கீழ் எவரும் பயணிக்க முடியாது.எனவே உடனடியாக பதவி விலகவேண்டுமென நாம் கோரிக்கை வைத்திருந்தோம்.

மிக நெருக்கடியான சூழல் அவருக்கு ஏற்பட்டிருந்தது. நெருக்கடியான சூழலுக்குள் அவர் தள்ளப்பட்டிருந்தார்.ஆனால் ஒரு கட்டத்தில் அவர் சுதாகரித்துக்கொண்டு நான் பதவி விலக தயாராக இருக்கிறேன் விரைவில் மாநாட்டை கூட்டுவோம் 2026 ஆம் ஆண்டு ஜனவரிமாதமே மாநாட்டை வைப்போம் அந்த மாநாட்டிலிருந்து பதவியிலிருந்து விலகி அடுத்து வருபவர்களுக்கு பதவியை கொடுப்போம் என்று கூறி ஒரு போலியான உத்தரவாதத்தை கொடுத்து எட்டு மாவட்டங்களிலும் தெரிவுகள் நடந்தது.

திருகோணமலையில் வழக்கு 

இந்த தெரிவுகள் மூலம் அவருக்கு தெரிந்தது இதன் மூலம் என்னை பதவியிலிருந்து வீட்டுக்கு அனுப்ப போகிறார்கள் என தெரிந்தே அவரே திருகோணமலையில் இருந்து ஒருவர் மூலம் வழக்கு தொடர்ந்தார்.தலைரும், செயலாளரும் இணைந்தே இந்த தெரிவுகள் பிழை
என வழக்கு போட்டனர்.

 இந்த வழக்கிற்கு பின்னர் வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் நீங்களே வழக்கு போட்டு விட்டு ஒரு ஜனநாயக விரோத செயலில் ஈடுபட் முடியாதென்று.இதற்கு எந்தவிதமான பதிலும் அவர்கள் சொல்லவில்லை.

ஆகவே இந்த விடயத்தில் தலைவரும் செயலாளரும் தமது சுயலாப நோக்கத்திற்காக ஜனநாயக விரோத அடிப்படையில் இன்றுவரை கட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் திணைக்களத்தால்  நெருக்கடி

 இது இவ்வாறிருக்க இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது தேர்தல் திணைக்களத்தால் இவர்களுக்கு ஒரு நெருக்கடி வந்துள்ளது.அதாவது ஏற்கனவே இருக்கின்ற தெரிவுகளின் பதவிக்காலம் முடிந்துவிட்டது நீங்கள் புதிய மாநாடு ஒன்றை நடத்த வேண்டுமென்று.

இந்த நிலையில் தேர்தல் திணைக்களத்தின் அறிவித்தலை அடுத்து ஏற்கனவே தெரிவாகிய தெரிவுகள் எல்லாம் பிழை புதிதாக தெரிவு செய்யவேண்டுமென செயலாளர் ஒரு முடிவிற்கு வந்துள்ளார்.இது ஒரு அப்பட்டமான ஜனநாயக மீறல்.சர்வாதிகாரமாக தலைவரும் செயலாளரும் மேற்கண்ட முடிவிற்கு வருகிறார்கள்.தற்போது தெரிவுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரகசியமாக நடக்கிறது.முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்கள் தமக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை விட்டு ஏனைய ஆறு மாவட்டங்களுக்கும் தெரிவுகளை செய்கின்றார்கள்.

 ஒரு தலைமை என்பது ஒழுக்கமாக கௌரவமாக கட்சியை வழி நடத்தவேண்டும்.இவர்களின் ஜனநாயக விரோத செய்றபாடுகளை ஒருபோதும் மன்னிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

‘திரிஷ்யம் 3′ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள் … | Makkal Osai

Next Post

அண்ணனைத் தொடர்ந்து தம்பியும் அதிரடி: 10 வயதில் சதம் விளாசி அசத்திய வைபவ் சூர்யவன்ஷியின் தம்பி ஆசிர்வாத்!

Next Post
அண்ணனைத் தொடர்ந்து தம்பியும் அதிரடி: 10 வயதில் சதம் விளாசி அசத்திய வைபவ் சூர்யவன்ஷியின் தம்பி ஆசிர்வாத்!

அண்ணனைத் தொடர்ந்து தம்பியும் அதிரடி: 10 வயதில் சதம் விளாசி அசத்திய வைபவ் சூர்யவன்ஷியின் தம்பி ஆசிர்வாத்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin