இலங்கையில் தற்போது காவலில் உள்ள சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வுத் தலையான துவான் சுரேஷ் சலே ஒரு முஸ்லிமாக இருந்தாலும் தாம் முஸ்லிம் வெறுப்பு இல்லாமல் அவருக்கு குரல்கொடுப்பதான புதிய சுருதிகள் வருகின்றன.
இதுவரை சலே, ஒரு முஸ்லிம் என்ற விடயம் தீவிரமாக பேசுபொருளாகப்பட்டதில்லை என்றபோதிலும் இப்போது அவைவருகின்றன.
உண்மையில் துவான் சுரேஸ் சலே மலாய் சமூகத்தைச்சேர்ந்த ஒரு முஸ்லிம் குடுமபத்தை சேர்ந்தவர். இலங்கை மலாய் சமூகம் நாட்டின் குடிப்பரம்பல் ஒருவீத்துக்கும் குறைவாக இருந்தாலும சிறிலங்கா இராணுவத்தில் மலாய் முகங்கள் சற்று ஒப்பீட்டுரீதியில் அதிகமாகவே உள்ளனது.
வடக்கு கிழக்கு மீதான போர்க்காலத்தில் சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுத் துறையில் இணைந்த சலே ராஜபக்சக்களின் விசுவாச நிலை அவரை சிறிலங்கா தேசியப் புலனாய்வு சேவையின் தலைமை இயக்குநராகவும் மாற்றியவரலாறும் சலே தனது பரிஸ் நகரில் உள்ள சிறிலஙகா தூதரகத்தில் பணியாற்றியபோது பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு என்ற அடிப்படையில் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பான உளவில் ஈடுபட்ட வரலாறுகள் அறியாததல்ல.
இதற்குள் பெங்கமுவே நாலக தேரர் போன்ற புலிக்காய்ச்சல் பிக்குகள் இன்னும் ஒரு படிமேலே போய் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகரவும் கத்தோலிக்க திருச்சபையின் அருட்தந்தை சிறில் காமினியும் புலிகளின் சிலிப்பர் செல்களாக செயற்படுவதாக ஐயத்தை சும்மா அடித்தும் விடும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது செய்திவீச்சு…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

