• Login
Friday, June 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

உலகக் கோப்பை முதல் ஆட்டத்திலேயே மாஸ் காட்டிய 17 வயது புயல்! யார் இந்த கில்பர்டோ மோரா? | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 12, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
உலகக் கோப்பை முதல் ஆட்டத்திலேயே மாஸ் காட்டிய 17 வயது புயல்! யார் இந்த கில்பர்டோ மோரா? | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 12, 2026 7:20 PM IST

இதற்கு முன்பு 1954 உலகக் கோப்பையில் 19 வயதில் அறிமுகமான அல்பிரடோ டோரஸ் என்பவரே மெக்சிகோவின் இளம் உலகக் கோப்பை வீரராக இருந்தார்.

கில்பர்டோ மோரா
கில்பர்டோ மோரா

மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் கூட்டாகத் தொடங்கியுள்ள 2026 ஃபிபா உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட மெக்சிகோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க மெக்சிகோவின் ‘எஸ்டாடியோ அஸ்டெகா’ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், மெக்சிகோ அணியின் ‘அட்டாகிங் மிட்பீல்டர்’ 17 வயது கில்பர்டோ மோரா, இரண்டாம் பாதியில் மாற்று வீரராகக் களமிறங்கினார். இதன் மூலம் மெக்சிகோ கால்பந்து வரலாற்றில் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடிய மிக இளம் வயது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.

கில்பர்டோ மோரா களத்திற்கு வந்த அடுத்த இரண்டு நிமிடங்களில் (67-வது நிமிடம்), மெக்சிகோ அணி தனது இரண்டாவது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தது. முன்னதாக, போட்டியின் 9-வது நிமிடத்தில் ஜூலியன் குய்னோன்ஸ் முதல் கோலை அடித்திருந்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதல்முறையாக தொடக்க ஆட்டத்திலேயே 3 சிவப்பு அட்டைகள் காண்பிக்கப்பட்டன. தென்னாப்பிரிக்க அணியின் இரு வீரர்களும், மெக்சிகோ அணியின் கேப்டன் சிசர் மான்டெஸும் சிவப்பு அட்டை பெற்று வெளியேறினர்.

இதற்கு முன்பு 1954 உலகக் கோப்பையில் 19 வயதில் அறிமுகமான அல்பிரடோ டோரஸ் என்பவரே மெக்சிகோவின் இளம் உலகக் கோப்பை வீரராக இருந்தார். தற்போது 17 வயதே ஆன மோரா, அந்த 72 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும், உலகக் கோப்பை வரலாற்றில் 17 வயதில் அறிமுகமான பீலே (Pele), சாமுவேல் எட்டோ (Samuel Eto’o) போன்ற உலகப் புகழ்பெற்ற கால்பந்து ஜாம்பவான்களின் வரிசையில் இணைந்து, உலகக் கோப்பையில் விளையாடிய 6-வது மிக இளம் வயது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

மெக்சிகோவின் டிஜுவானா (Tijuana) கிளப் அணிக்காக விளையாடி வரும் மோரா, தனது 16-வது வயதிற்கு முன்பே உள்நாட்டு லீக் போட்டிகளில் அறிமுகமாகிப் பல சாதனைகளைப் படைத்தவர். 2025ஆம் ஆண்டு சிலியில் நடைபெற்ற ஃபிபா யு-20 (U-20) உலகக் கோப்பையில் மெக்சிகோ அணியைக் கால்இறுதி வரை வழிநடத்திப் பயிற்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இவரது அபாரமான திறமையைக் கண்ட மெக்சிகோ சீனியர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜேவியர் அகுயிரே, இவரை 2025 கான்காகாஃப் கோல்ட் கப் தொடருக்கான சீனியர் அணியில் சேர்த்தார். அத்தொடரின் அரையிறுதியில் ரவுல் ஜிமினெஸ் வெற்றி கோல் அடிப்பதற்குக் காரணமான அசிஸ்ட்டை இந்த இளம் வீரர்தான் வழங்கினார்.

தற்போது மெக்சிகோ அணியின் முக்கியத் தூணாக மாறியுள்ள கில்பர்டோ மோராவை, 15 முறை ஐரோப்பிய சாம்பியனான புகழ்பெற்ற ‘ரியல் மாட்ரிட்’ (Real Madrid) கிளப் அணி தங்களது அணியில் இணைக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மெக்சிகோ அணி தனது அடுத்த குரூப்-ஏ (Group A) ஆட்டத்தில் ஜூன் 19ஆம் தேதி தென்கொரியாவை எதிர்கொள்ள உள்ளது.

Read More

Previous Post

Returning Officer: குடியரசுத் தலைவரை விட ஃபவர்புல்..? அவர் வைத்தது தான் சட்டம்… சட்டம் சொல்வது என்ன?

Next Post

LIC Policy | ஓய்வுக்கு பிறகும் மாதம் ரூ.11,400 கிடைக்கும்… எல்ஐசியின் அசத்தல் திட்டம்! | வணிகம் போட்டோகேலரி

Next Post
LIC Policy | ஓய்வுக்கு பிறகும் மாதம் ரூ.11,400 கிடைக்கும்… எல்ஐசியின் அசத்தல் திட்டம்! | வணிகம் போட்டோகேலரி

LIC Policy | ஓய்வுக்கு பிறகும் மாதம் ரூ.11,400 கிடைக்கும்... எல்ஐசியின் அசத்தல் திட்டம்! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin