தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் சில்வா, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறையான கொள்முதல் செயல்முறைகளைப் பின்பற்றாமல், தனியார் நிறுவனம் ஒன்றிடமிருந்து 165 லட்சம் ரூபாய் (ரூ. 16.5 மில்லியன்) செலவில் நாற்காலிகளைத் கொள்முதல் செய்தமை மற்றும் அந்த நாற்காலிகள் காணாமல் போனமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்த விசாரணைகளின் அடிப்படையில், ‘ஊழல்’ என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் புதன்கிழமை (10) அன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர், இன்றைய கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

