சீன அதிபர் ஷி ஜின்பிங், ஏழு ஆண்டுகளில் முதன்முறையாக வடகொரியாவிற்கு மேற்கொண்டுள்ள தனது வரலாற்று சிறப்புமிக்க பயணத்தின் போது, அந்நாட்டுத் தலைநகர் பியொங்யாங்கில் அவருக்கு வண்ணமயமான, பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது மனைவி ரி சோல் ஜூ ஆகியோர், சீன அதிபருக்கு நேரில் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். அத்துடன், இரு நாட்டுப் கொடிகளை ஏந்தியபடி திரண்டிருந்த பொதுமக்களின் உற்சாக முழக்கங்களுக்கும், இராணுவ அணிவகுப்பு மரியாதைகளுக்கும் மத்தியில் இந்த வரவேற்பு நிகழ்ந்தது.
இந்த அரிய சந்திப்பு குறித்து சீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி:
சீனாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான உறவை வெகுவாகப் பாராட்டியுள்ள அதிபர் ஷி ஜின்பிங், “இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தற்போது ஒரு ‘புதிய வரலாற்றுத் தொடக்கப் புள்ளியில்’ நிற்கின்றன. அத்துடன், நாம் இருவரும் ‘காலத்தின் புதிய பணிகளைச்’ சுமந்து நிற்கிறோம்,” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளது.


