புத்தளம் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர், கல்பிட்டிய காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியைத் தவிர மற்ற அனைத்து அதிகாரிகளையும் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி, 24 காவல் அதிகாரிகளுக்கு உடனடியாகவும், மேலும் 15 அதிகாரிகளுக்கு ஜூன் 10 ஆம் திகதி முதல் இடமாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதே மாவட்டத்தில் இருந்து இடமாற்றம்
இந்த அதிகாரிகள் அனைவரும் புத்தளம் காவல் பிரிவில் உள்ள மற்ற காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், புத்தளம் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர், இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளுக்குப் பதிலாக, புத்தளம் பிரிவில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் 35 அதிகாரிகளை கல்பிட்டிய காவல் நிலையத்திற்கு உடனடியாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

