அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்ட்ரம்ப் – ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இடையே சந்திப்பு நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இருவருக்குமான சந்திப்பு நடைபெறக்கூடும் என ட்ரம்ப் முன்னர் கூறியிருந்த நிலையில் அதனை மறுத்து செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசினார். அதில், “ட்ரம்ப் கமேனியுடன் சந்திப்பு நடத்தத் தயாராக இருப்பதாகவும் அல்லது சந்திப்பு நடத்த விரும்புவதாகவும் ஒரு அறிக்கையைப் பார்த்தேன். நாம் யதார்த்தமாகச் சிந்தித்து, நிஜ உலகில் வாழ வேண்டும் எnறு நினைக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கமெனியுடன் சந்திப்பு
ஈரான் தனது அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்த ஒப்புக்கொண்டதாகக் கூறிய ட்ரம்ப், ஈரானின் உச்ச தலைவர் கமேனியைச் சந்திக்கும் வாய்ப்பு தனக்கு அமையவில்லை என்றும் எதிர்காலத்தில் சூழ்நிலைகள் சரியாக அமைந்தால் கமெனியுடன் சந்திப்பு நடைபெற வாய்ப்பிருப்பதாக சூசகமாகக் கூறியதைத் தொடர்ந்து அப்பாஸ் அராக்சி இவ்வாறு பேசினார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

