• Login
Saturday, June 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

குழந்தைகளின் தலையில் பேன், ஈறு தொல்லையா? – நிரந்தரத் தீர்வு தரும் 4 வழிகள் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
June 6, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
குழந்தைகளின் தலையில் பேன், ஈறு தொல்லையா? – நிரந்தரத் தீர்வு தரும் 4 வழிகள் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
குழந்தைகளின் தலையில் பேன், ஈறு தொல்லையா? – நிரந்தரத் தீர்வு தரும் 4 வழிகள்

வீட்டில் பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்குப் பேன் மற்றும் ஈறுத் தொல்லை பொதுவான பிரச்சினை. வேப்பிலை, படிகாரம், வெற்றிலை, கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற இயற்கைப் பொருட்களைக் கொண்டு நிரந்தரத் தீர்வு தரும் 4 எளிய வழிமுறை. வாரம் மூன்று முறை மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்தால் முழுமையான விடுபாட்டைப் பெறலாம்.

வீட்டில் பள்ளிச் செல்லும் குழந்தைகள், குறிப்பாகப் பெண் குழந்தைகள் இருந்தால், அவர்கள் தலையில் பேன் மற்றும் ஈறு தொல்லை இருந்துகொண்டே இருக்கும். வாராவாரம் தலைக்கு எண்ணெய் வைத்துச் சீப்பால் வாரி எடுத்தாலும், பேன் குறைந்த பாடில்லை. குழந்தைகளுக்குப் பள்ளி ஆண்டு விடுமுறை விட்டாலே, பேன் சீப்பும் கையுமாகக் குழந்தைகளின் தலையில் இருக்கும் பேன் மற்றும் ஈறுகளை ஒழிப்பதே அம்மாக்களுக்கு ‘தலை’யான கடமையாகிவிடும்.

தற்போதைய சூழலில், குழந்தைகள் வீட்டிலேயே இருக்கும் இந்த நேரத்தைப் பயன்படுத்தி, அவர்களின் தலையில் உள்ள பேன் மற்றும் ஈறுகளைப் போக்குவதற்கான வழிமுறைகளை ஆயுர்வேத மருத்துவர் ரேச்சல் ரெபேக்கா விளக்குகிறார்.

தலையைச் சுத்தமாக வைத்துக்கொண்டாலே பேன், ஈறு பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். அதனால், குழந்தைகளுக்குக் குறைந்தபட்சம் வாரம் இருமுறை தலைக்கு நல்லெண்ணெய் வைத்துக் குளிப்பாட்ட வேண்டும். கூந்தல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்க வாரம் ஒருமுறை தேங்காய்ப்பால் கிரீம் பேக்கைப் பயன்படுத்தலாம்.

கெட்டியான தேங்காய்ப்பாலை ஒரு கிண்ணத்தில் ஊற்றி 10 நிமிடம் வைத்தால், தண்ணீர் அடியில் தங்கிவிட, மேலே கிரீம் போன்று மிதக்கும். இந்தக் கிரீமை எடுத்துக் குழந்தையின் கூந்தல் முழுவதும் தடவிப் பேக் போட வேண்டும். 15 நிமிடங்களுக்குப் பிறகு, ஷாம்பூ போடாமல் வெறும் தண்ணீரில் தலைக்குக் குளிக்கவைக்க வேண்டும். குழந்தைகளின் தலை மற்றும் கூந்தலைத் தவறாமல் பராமரித்து வந்தாலே பேன், ஈறு போன்ற பிரச்சினைகள் வராது என்று ரேச்சல் கூறுகிறார்.

பேன் மற்றும் ஈறு பிரச்சினைக்கு முதல் மற்றும் முக்கியமான தீர்வாக வேப்பிலை ஹேர் பேக்கை ரேச்சல் பரிந்துரைக்கிறார். ஒரு கைப்பிடி அளவு கொழுந்து வேப்பிலைகளை எடுத்து மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். இதைத் தலையில் எண்ணெய் இல்லாமல் கூந்தல் முழுவதும் தேய்த்து, 30 நிமிடங்கள் ஊறவிட வேண்டும்.

அதன் பிறகு, அரை லிட்டர் வெந்நீரில் 2 அல்லது 3 கிராம் படிகாரத்தூளைக் கரைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைக்கு சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டுத் தலைக்குக் குளிக்கவைத்த பின்னர், மிதமான சூட்டில் இருக்கும் படிகாரத் தண்ணீரைத் தலையில் ஊற்றி 5 நிமிடங்கள் காத்திருந்து, பின்னர் வெறும் தண்ணீரில் அலசிவிட வேண்டும். வேப்பிலையும் படிகாரமும் ஆன்டி வைரல் தன்மை கொண்டவை.

இது தலையில் உள்ள பேன் மற்றும் ஈறுகளைப் போக்குவதுடன், மறுபடியும் வராமலும் காக்கும். இரண்டாவது முறையாக, வெற்றிலை பேக்கைப் பயன்படுத்தலாம். பத்து வெற்றிலைகளை நன்கு அலசி அரைத்துப் பேஸ்ட் ஆக்கி, தலையில் பேக்காகப் போட்டு 15 நிமிடங்கள் ஊறவிட வேண்டும். பின்னர், முன்பு போலவே 2-3 கிராம் படிகாரத்தூளை வெந்நீரில் கரைத்து, சீயக்காய் அல்லது ஷாம்பூவில் தலைகுளித்த பிறகு, அந்தப் படிகாரத் தண்ணீரைத் தலையில் ஊற்றி 5 நிமிடங்கள் கழித்து வெறும் தண்ணீரில் அலச வேண்டும்.

மூன்றாவது முறையாக, கடுகு எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேவையான அளவு கடுகு எண்ணெயை மிதமாகச் சூடாக்கித் தலை முழுவதும் தடவி, அதிகபட்சம் 15 நிமிடங்கள் ஊறவிட வேண்டும். பின்னர், சீயக்காய்த்தூள் அல்லது ஷாம்பூ போட்டுத் தலைக்குக் குளிக்கவைத்தால் பேன் தொல்லை நீங்கும்.

நான்காவது வழியாக, மிதமாகச் சூடாக்கிய நல்லெண்ணெயைக் குழந்தையின் தலையில் நன்றாகத் தடவி, 30 நிமிடங்கள் ஊறவிட்டுப் பேன் சீப்பால் நன்கு வாரினால், பேன்கள் அனைத்தும் வந்துவிடும். இந்த நான்கு வழிமுறைகளையும் பேன்கள் மற்றும் ஈறுகளைப் போக்க வாரத்தில் மூன்று முறை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், தொடர்ந்து மூன்று வாரங்களுக்குச் செய்து வந்தால், பேன் மற்றும் ஈறுத் தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

இந்தியா வந்தார் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித்… உச்சபட்ச போலீஸ் பாதுகாப்பில் டெல்லி!

Next Post

Iran US Tensions | ட்ரோன் ஏவிய ஈரான்… சுட்டுவீழ்த்திய அமெரிக்கா… ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்! | World News (உலக செய்திகள்)

Next Post
Iran US Tensions | ட்ரோன் ஏவிய ஈரான்… சுட்டுவீழ்த்திய அமெரிக்கா… ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்! | World News (உலக செய்திகள்)

Iran US Tensions | ட்ரோன் ஏவிய ஈரான்... சுட்டுவீழ்த்திய அமெரிக்கா... ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin