தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு…
கிளீன் கவர்மெண்ட் ஆக பணியாற்றுவதே இலக்கு. அமைச்சர்கள் யாரும் தவறு செய்யக் கூடாது தவறு செய்பவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார் .
பெயரளவில் திட்டங்கள் இருக்கக் கூடாது நாம் செயல்படுத்தும் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர வேண்டும். அமைச்சர்கள் துறை ரீதியாக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை விரைந்த செயல்படுத்த வேண்டும் .திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேருகிறதா என்று அமைச்சர்கள் கவனிக்க வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகள் வெறும் வாக்குறுதிகளாக மட்டும் நான் அளிக்கவில்லை, மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் மட்டுமே தேர்தல் வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் திட்டங்கள் குறித்து முன்னதாக அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு வழங்கிய பேட்டியில்,
“436 திட்டங்களை முதலமைச்சர் விஜய் வழங்கியுள்ளார். ஒவ்வொரு துறைக்கான திட்டங்களையும் விஜய் வழங்கியுள்ளார். இந்தத் திட்டங்களை துறை சார்ந்த அமைச்சர்கள் மேற்கொள்ள வேண்டும். நல்லாட்சி ,போதையில்லா தமிழகம் போன்ற திட்டங்கள் உள்ளன .
தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்திற்கு 37 திட்டங்கள், மதுவிலக்கு ஆயத் தீர்வைக்கு 30 திட்டங்கள், வேளாண் துறைக்கு 27 திட்டங்கள் ,கால்நடை மீன்வளம் பால்வளத் துறைக்கு 27 திட்டங்கள், சுற்றுலாத்துறைக்கு 26 திட்டங்கள், பள்ளி கல்வித்துறைக்கு 20 திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கஞ்சா, கூல்-லிப், குட்காவை ஒழிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை ஒழிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேகதாது அணை கட்ட சட்டபூர்வமாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும்
தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் சேர்த்து திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன. அனைத்து துறைகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ள திட்டங்களை முதலமைச்சர் விஜய் தொடர்ந்து ஆராய்வார்.” எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜூன் 18ம் திகதி காலை 10 மணிக்குதமிழ்நாடு சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் கூடுகிறது என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவிப்பு. எத்தனை நாட்கள் கூட்டம் நடத்தப்படும் என்பது அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். R

