இலங்கை அதிபர் சேவையின் (Sri Lanka Principal Service) தரம் III இற்கான ஆட்சேர்ப்புக்கான வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சை, வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி நடத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை (Admission Cards) பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இப்பரீட்சை முன்னதாகக் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி நடத்தப்படவிருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணங்களினால் கல்வி அமைச்சினால் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

