இந்தத் திட்டத்தின் கீழ் காளான் உற்பத்திக் கூடம், காளான் விதை உற்பத்தி மையம், பசுமைக்குடில், நிழல் வலைக்குடில், விளைநிலங்களுக்கு இரும்புக்கம்பி வேலி, பேட்டரி விசைத் தெளிப்பான், பேக் ஹவுஸ் மற்றும் பதப்படுத்தும் அலகுகள், சூரிய சக்தி பயிர் உலர்த்தும் கருவி, மண்புழு உரத் தொட்டி, பண்ணைக் குட்டைகள், நடமாடும் தள்ளுவண்டி மற்றும் தேனீ வளர்ப்பு உள்ளிட்ட 11 வகையான வேளாண் தொழில்களுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.


