2014, 2019 மற்றும் 2024 என தொடர்ந்து மூன்று முறை மத்தியில் பாஜக ஆட்சி எனும் புதிய சாதனையை ஏற்கனவே படைத்துள்ள பாஜக, தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தும், சில மாநிலங்களில் அதன் இருப்பை பலப்படுத்தியும் வருகிறது. இவற்றுக்கு முக்கிய காரணங்களாக பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இருந்துவருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.


