
இலங்கை கிரிக்கெட் சபையால் 46 வீரர்களுக்கு தேசிய ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் முதற்தடவையாக இடம்பெற்றுள்ளார்.
இதேவேளை துடுப்பாட்டவீரர் பானுக ராஜபக்ஷவுக்கு ஒப்பந்தம் வழங்கப்படவில்லை.
இதேவேளை முன்னர் தன்னை ஒப்பந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டாமென கிரிக்கெட் சபையுடன் முரண்பட்டிருந்த வேகப்பந்துவீச்சாளர் நுவான் துஷார, தற்போது புதிய நிர்வாகத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்த நிலையில் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
இந்த ஒப்பந்தங்களானவை ஏப்ரல் 1 2026 முதல் மார்ச் 31 2027 வரை செல்லுபடியாகுமென்பது குறிப்பிடத்தக்கது.

