இருப்பினும், கடந்த 21 நாட்களில் எபோலா பாதிப்புள்ள நாட்டிலிருந்து பயணம் செய்திருந்தாலோ அல்லது அதன் வழியாகப் பயணித்திருந்தாலோ, உங்களுக்குக் காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, அல்லது காரணமின்றி ஏற்படும் ரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் தோன்றினால், உங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.


