ஆனால், ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட வெளிநாட்டுச் செலாவணி இருப்புத் தரவுகளை ப்ளூம்பெர்க் நிறுவனம் ஆய்வு செய்ததில், வங்கியின் வசமுள்ள தங்கத்தின் மொத்த மதிப்பு எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது . இந்தத் தர்க்கத்தின் அடிப்படையில்தான், சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை ரிசர்வ் வங்கி சந்தையில் விற்றுள்ளது என்ற முடிவுக்கு அந்நிறுவனம் வந்துள்ளது. இந்தத் தங்க விற்பனை குறித்து, ப்ளூம்பெர்க் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் மூத்த இந்தியப் பொருளாதார நிபுணர் அபிஷேக் குப்தா கூறுகையில், சமீபத்தில் தங்கம் மீதான இறக்குமதி வரியை அரசு உயர்த்தியதால், ரிசர்வ் வங்கியின் வசமுள்ள தங்கம் மற்றும் டாலர்களின் மதிப்பு உண்மையில் உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு மதிப்பு அதிகரிக்காதது, ரிசர்வ் வங்கி தங்கத்தை விற்றுள்ளது என்பதையே காட்டுகிறது,” என்று சுட்டிக்காட்டியுள்ளார்


