Last Updated:
இந்த சாதனத்தை உலகளவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு செல்லும் விதமாக தற்போது உற்பத்தி பணியை முடுக்கிவிட்டுள்ளதாக தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் வாங் சுவான் தெரிவித்துள்ளார்.
நடிகர் வடிவேலுவின் இந்த காமெடி போல கொசு மருந்தையும் அடிக்காமல், மக்களையும் துன்புறுத்தாமல் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் லேசர் முறையில் கொசுவை கொல்லும் சாதனத்தை உருவாக்கியுள்ளது சீனா.
ஜியாங்சு(JIANGSU) மாகாணத்தில் உள்ள ஃபோட்டான்மேட்ரிக்ஸ் (Photonmatrix ) என்ற தொழில்நுட்ப நிறுவனம், கடந்த 2022-ஆம் ஆண்டு இந்த சாதனத்தை உருவாக்கத் தொடங்கியது. இதற்கான முன்மாதிரியை மட்டும் தயாரிக்க 3 ஆண்டுகள் செலவிட்டுள்ளது.
வழக்கமான கொசு ஒழிப்பு தயாரிப்புகளைப் போல் அல்லாமல், இந்த சாதனம் மிகச் சிறிய அளவிலான கொசுக்களையும் துல்லியமாகக் கண்டறிய லேசர் ஒளிக்கதிர்கள், AI-தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இதிலுள்ள AI கேமராக்கள் கொசுக்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து, 3 மில்லி செகண்டுக்குள் லேசர் கதிர் மூலம் அவற்றை அழிக்கும் வல்லமை கொண்டவை. கொசுமருந்து போன்ற நச்சு ரசாயனங்கள் இதில் பயன்படுத்தப்படுவதில்லை.
இந்த சாதனத்தை உலகளவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு செல்லும் விதமாக தற்போது உற்பத்தி பணியை முடுக்கிவிட்டுள்ளதாக தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் வாங் சுவான் தெரிவித்துள்ளார்.


