• Login
Tuesday, June 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மீகொடை விபத்து : சந்தேகநபருக்கு விளக்கமறியல்…

GenevaTimes by GenevaTimes
June 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மீகொடை விபத்து : சந்தேகநபருக்கு விளக்கமறியல்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின் மீகொடை பகுதியில், வெசாக் அன்னதானம்  (தன்சல்) உணவுப் பந்தல் வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மதுபோதையில் வந்த வாடகை கார் (Rent-a-car) ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், சிறுமி உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.



இக்கோர விபத்தை ஏற்படுத்திய பிலியந்தலையைச் சேர்ந்த 42 வயதுடைய காரின் சாரதியை எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மீகொடை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த உணவுப் பந்தல் (தானசாலை) ஒன்றில் பெருமளவிலான பொதுமக்கள் உணவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக வீதியோரமாக வரிசையில் நின்றுகொண்டிருந்தனர்.


அப்போது, அவிசாவெல்ல பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாகப் பயணித்த வாடகை கார் ஒன்று, வீதியோரம் நின்ற மக்கள் கூட்டத்திற்குள் கண் இமைக்கும் நேரத்திற்குள் புகுந்து கொடூர விபத்தை ஏற்படுத்தியது.


காரின் மோதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலும் வைத்தியசாலையிலும் 15 வயதுச் சிறுமி, 32 மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35 மற்றும் 38 வயதுடைய மூன்று ஆண்களுமாக மொத்தம் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


இவ்விபத்தில் படுகாயமடைந்த ஒரு சிறு குழந்தை உட்பட 7 பேர் அவசர அவசரமாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


விபத்து நடந்த உடனே காரை ஓட்டிவந்த சாரதியை மடக்கிப் பிடித்த மீகொடை பொலிஸார் அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.


இச்சம்பவத்தின் போது காரின் சாரதி மிகக் கடுமையான மதுபோதையில் இருந்ததை பொலிஸார் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். போதையின் உச்சத்தில் வாகனத்தை ஓட்டியதே இந்த 6 உயிர்களின் பறிபோதலுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட போதைச் சாரதி இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, விபத்தின் பாரதூரத் தன்மையைக் கருத்திற்கொண்டு அவரை எதிர்வரும் ஜூன் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இச்சம்பவம் குறித்து மீகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Read More

Previous Post

Tamilmirror Online || ’சாதி, மத அரசியலை உடைத்தது த.வெ.க.’

Next Post

Tamilmirror Online || துப்பாக்கி உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Next Post
Tamilmirror Online || துப்பாக்கி உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Tamilmirror Online || துப்பாக்கி உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin