பாதுகாப்பான முதலீடுகளைப் பொறுத்தவரை, பலரின் முதல் தேர்வு பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் ஆகும். அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் இந்த நீண்ட கால சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்வது, உத்தரவாதமான வருமானத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வரி விலக்குகளையும் வழங்குகிறது. நீங்கள் ஒவ்வொரு மாதமும் PPF கணக்கில் ரூ.5,000 டெபாசிட் செய்தால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தமாக எவ்வளவு பணம் கிடைக்கும் என்று தற்போது பார்க்கலாம்.

