• Login
Sunday, May 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || “ஒன்றாகவா, தனித்தனியாகவா வந்தார்கள்?”

GenevaTimes by GenevaTimes
May 31, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || “ஒன்றாகவா, தனித்தனியாகவா வந்தார்கள்?”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



 


தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், தொழில்முறை பந்தய வீரருமான   அஜித்குமாரின் தாயார் மோகினி மணி சனிக்கிழமை காலை சென்னையில் காலமானார். இச்செய்தியைக் கேட்டவுடன் துபாயில் இருந்த நடிகர் அஜித்குமார் உடனடியாக சென்னை திரும்பினார். அஜித்தின் குடும்பத்தினர் இந்த ஈடுகட்ட முடியாத பேரிழப்பால் ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கியுள்ள நிலையில், திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் பிரபல நடிகை த்ரிஷா கிருஷ்ணன் ஆகியோர் அஜித்தின் இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.


நடிகராக இருந்து அரசியல் தலைவராக மாறிய தமிழக முதலமைச்சர் விஜய், சனிக்கிழமை அன்று அஜித்குமாரின் இல்லத்திற்கு வருகை தந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அஜித்தின் தாயார் மோகினி மணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக முதலமைச்சர் விஜய் இந்த விஜயத்தை மேற்கொண்டார்.


முதலமைச்சர் விஜயுடன் நடிகை த்ரிஷாவும் இந்த அஞ்சலி நிகழ்வின் போது உடனிருந்தார். சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பல வீடியோக்களில், த்ரிஷா முதலமைச்சர் விஜயுடன் இணைந்து அஜித்தின் இல்லத்திற்குள் நுழைவதையும், அஜித்தின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதையும் காண முடிகிறது.


அஜித்தின் இல்லத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்புடன் முதலமைச்சர் விஜய் வந்திறங்குவதை அங்கிருந்த வீடியோக்கள் பதிவு செய்துள்ளன. தனது பாதுகாப்புப் படையினர் சூழ்ந்து வர, கவலையுடன் அஜித்தின் வீட்டிற்குள் விஜய் நடந்து சென்றார். காரை விட்டு கீழே இறங்கியதும், வாசலில் நின்ற அஜித்குமாரை முதலமைச்சர் விஜய் கட்டித்தழுவி (Hug) ஆறுதல் கூறினார். அதன்பின்னர், வீட்டிற்குள் சென்று துக்கத்தில் இருக்கும் குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிட்டார். விஜயுடன் வந்திருந்த நடிகை த்ரிஷா, கருப்பு நிற பாரம்பரிய சல்வார் உடையில் அஞ்சலி செலுத்தியதுடன், குடும்பத்தினருக்குத் தனது துக்கத்தைப் பகிர்ந்துகொண்டார்.


எனினும், விஜயும் த்ரிஷாவும் ஒன்றாக இணைந்து அஜித்தின் குடும்பத்தினரைச் சந்திக்க வந்தார்களா அல்லது தனித்தனியாக வந்தார்களா என்பதில் இன்னும் தெளிவான விபரங்கள் இல்லை. சில வீடியோ பதிவுகள் த்ரிஷா முதலமைச்சர் விஜய் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே தனி வாகனத்தில் வந்து சேர்ந்ததாகக் காட்டுகின்றன. மேலும் சில வீடியோக்கள் இரு நட்சத்திரங்களும் ஒரே காரில் வராமல், வெவ்வேறு கார்களில் வந்து வீட்டிற்குள் நுழைவதைக் காட்டுகின்றன.


நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (89), வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவினால் சனிக்கிழமை அதிகாலை தூக்கத்திலேயே அமைதியாகக் காலமானார். அவரது கணவர் (அஜித்தின் தந்தை) 85ஆவது வயதில் காலமான மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மோகினி மணியின் இந்த மறைவு நிகழ்ந்துள்ளது.


இத்துயரச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அஜித்குமாரின் குடும்பத்தினர் உணர்வுபூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில்:


“எங்களது தாயார் மோகினி மணி (89), கடந்த சில வருடங்களாக நிலவி வந்த உடல்நலக்குறைவைத் தொடர்ந்து, இன்று அதிகாலை தூக்கத்திலேயே அமைதியாக எங்களை விட்டுப் பிரிந்தார். கடந்த சில வருடங்களாக அவருக்கும் எங்களது குடும்பத்திற்கும் சிறந்த சிகிச்சை மற்றும் ஆதரவை வழங்கிய மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றியுடையவர்களாக இருக்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளனர்.


மேலும், தங்களது துயரத்தின் போது அமைதியை விரும்புவதாகவும், இறுதிச் சடங்குகள் முற்றிலும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாக   நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


“தாயாரை அல்லது குடும்பத்தின் மூத்த பெரியோரை இழந்த துயரத்தை அறிந்த அனைவரும், எங்களது இந்தத் துக்க தருணத்தில் அமைதியாக இருக்க விரும்புவதை மதிப்பார்கள் என நம்புகிறோம். எங்களது தாயார் தனது வாழ்நாளின் ஒவ்வொரு நாளும் காட்டிய அதே கண்ணியம், சமநிலை மற்றும் மென்மையான வலிமையுடன் அவரது நினைவை நாங்கள் போற்றுகிறோம்.”


என்று அந்த உணர்வுபூர்வமான அறிக்கையில் அஜித்தின் சகோதரர்களான அனூப் குமார், அனில் குமார் மற்றும் நடிகர் அஜித்குமார் ஆகியோர் கூட்டாகக் கையெழுத்திட்டுத் தெரிவித்துள்ளனர்.


 



Read More

Previous Post

விசாக் தினத்தின் உன்னதமான நற்பண்புகளைப் போற்றுவோம்; வெறுப்பைத் தூண்டும் செயல்களுக்கு எதிராக நிற்போம் – Malaysiakini

Next Post

விதி யாரை விட்டது… கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற பெண்.. அதே காதலனால் நேர்ந்த கொடூர முடிவு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
விதி யாரை விட்டது… கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற பெண்.. அதே காதலனால் நேர்ந்த கொடூர முடிவு! | India News (இந்தியா செய்திகள்)

விதி யாரை விட்டது... கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற பெண்.. அதே காதலனால் நேர்ந்த கொடூர முடிவு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin