பருத்தித்துறையில் இருந்து கடற்றொழிலுக்கு போன நிலையில் காணாமல் போன
கடற்றொழிலாளர்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, குறித்த கடற்றொழிலாளர்களை இந்திய கடல் எல்லைப்பகுதியை அண்மித்து தேடுதல் நடத்த இந்திய
அரசின் அனுமதியை பெற்று, தேடுதல் நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடுமையான முயற்சிகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள்
காணாமல் போனமை தொடர்பில் , கடற்படையினர் நீண்ட தேடுதல்களை நடத்தி வருகின்றனர்.

தேடுதல் பணிகள் விஸ்தரிக்கப்பட்டு, இந்திய கடல் எல்லை பகுதியை அண்மித்த
இடங்களிலும் தேடுதல் நடாத்த இந்திய அரசாங்கத்தின் அனுமதிகளை பெற்று தேடுதல்
பணிகளை முன்னெடுத்துள்ளோம்.
தடயறி (GPS) ஊடாக அவர்களின் படகுகளின் இடத்தை கண்டறிய கடுமையான முயற்சிகள்
எடுத்துள்ள போதிலும் அவை தொடர்பில் கண்டறிய முடியவில்லை. அத்துடன் ட்ரோன் ஊடாக
கடற்பகுதியில் கடற்படையினர் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்“ என
தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

