Last Updated:
கர்நாடகாவில் சித்தராமையா ராஜினாமைக்கு பின், பெங்களூரு கூட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் டி.கே.சிவக்குமாரை அடுத்த முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்கிறார்கள்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவின் பேரில், வியாழக்கிழமை அன்று சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவரது ராஜினாமா கடிதம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் இடைக்கால முதலமைச்சராக அவர் தொடர்கிறார்.
இந்த நிலையில், அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம்
பெங்களூருவில் உள்ள விதான சவுதாவின் மாநாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு சட்டமன்றக் கட்சித் தலைவர் என்ற முறையில் சித்தராமையா தலைமை தாங்குகிறார்.
இதில் காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் டி.கே. சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். புதிய முதலமைச்சரை முறைப்படி ஒருமனதாகத் தேர்ந்தெடுப்பதே இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
புதிய முதலமைச்சருடன் பதவி ஏற்கும் புதிய அமைச்சர்கள் யார், யாருக்கு எந்தெந்த முக்கியத் துறைகளை ஒதுக்குவது என்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த கூட்டத்தில், கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக டி.கே.சிவகுமார் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகிறார் டி.கே.சிவக்குமார்.. பெங்களூருவில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்


