போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்கள் தொடர்பில் காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அபராதங்களை செலுத்துவதற்கான வசதியை காவல்துறை வழங்குவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் போலிச் செய்திகளால் பொதுமக்கள் ஏமாந்துவிட வேண்டாம் என இலங்கை காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
தற்போது தனிநபர்களைக் குறிவைத்து நடைபெறும் இந்த இணையவழி அச்சுறுத்தல்கள் தொடர்பாக ஏராளமான முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இணையவழி அச்சுறுத்தல்
இதுபோன்ற தவறான செய்திகள் மற்றும் இணையவழி அச்சுறுத்தல்களுக்குப் பலியாகாமல் இருக்க அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாகப் பின்பற்றுமாறு அதிகாரிகளும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

