• Login
Friday, May 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பகாங்கில் காதலியின் 2 வயது மகனை அடித்துக் கொன்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்!

GenevaTimes by GenevaTimes
May 29, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
பகாங்கில் காதலியின் 2 வயது மகனை அடித்துக் கொன்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மக்களைக் காப்பாற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றும் 29 வயது இளைஞர் ஒருவர், தனது காதலியின் 2 வயது பச்சிளம் மகன் முகமட் ஹெய்டர் (Mohamad Hayder) என்பவரை மிகக் கொடூரமாக அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் இன்று தெமர்லோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுக் கொலைக் குற்றம் சாட்டப்பட்டார்.

குற்றஞ்சாட்டப்பட்ட முகமட் இக்பால் ஃபித்ரி மஸ்லான் (Muhammad Iqbal Fitri Mazlan – வயது 29) மீதான இந்தக் கொலைக் குற்றச்சாட்டு, மாஜிஸ்திரேட் அனிஸ் அத்லினா அபு ஜோஹான் முன்னிலையில் வாசித்துக் காட்டப்பட்டது. எனினும், கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் வரம்பிற்குள் வருவதால், இன்று மாஜிஸ்திரேட்டிடம் எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

நீதிமன்றக் குற்றப்பத்திரிகையின்படி, ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இக்பால், கடந்த மே 11-ஆம் தேதி காலை 9:00 மணியளவில், ‘தாமான் செபெராங் தெமர்லோ இண்டா 2A’ (Taman Seberang Temerloh Indah 2A) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து 2 வயது சிறுவன் முகமட் ஹெய்டர் அப்துல் முக்மினை மிகக் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த மே 13-ஆம் தேதி அந்த 2 வயது சிறுவன் சுயநினைவற்ற நிலையில் சுல்தான் ஹாஜி அகமட் ஷா மருத்துவமனைக்குக் (Sultan Haji Ahmad Shah Hospital) கொண்டு செல்லப்பட்டார். ஆரம்பத்தில் இச்சம்பவம் ஒரு ‘குழந்தை வதை’ (Child Abuse) என்ற கோணத்திலேயே போலீசாரால் விசாரிக்கப்பட்டது.

எனினும், உயிரிழந்த சிறுவனின் உடலைத் துல்லியமாகப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவ நிபுணர்கள், அச்சிறுவனின் தலையில் மிகக் கடுமையான மற்றும் பலத்த ஆயுதங்களால் தாக்கப்பட்ட அதிர்ச்சி (Blunt Force Trauma to the Head) ஏற்பட்டதே மரணத்திற்குக் காரணம் என்பதை உறுதிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை உடனடியாகக் கொலை வழக்காக (Murder) மாற்றிய போலீசார், கடந்த மே 20-ஆம் தேதி சிறுவனின் தாயையும், அவளது காதலனான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இக்பாலையும் தெமர்லோவில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.

இவ்வழக்கில் குற்றவாளிக்கு ஆதரவாக எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. இக்கொலை வழக்கு ஜாமீனில் வெளிவர முடியாத ஒன்று என்பதால், அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் அத்ரியானா அஸ்ரின் குற்றவாளிக்குக் கடுமையான பிணை மறுப்பை (No Bail) விடுத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வரும் செப்டம்பர் 1-ஆம் தேதிக்கு வழக்கினை ஒத்திவைத்துள்ளது.

மலேசியத் தண்டனைச் சட்டம் பிரிவு 302-இன் கீழ் (கொலைக்குற்றம்) இக்பால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், இவருக்குக் கட்டாய மரண தண்டனை (Death Penalty) அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன், குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் (Sheduling Rotan) விதிக்கப்படச் சட்டத்தில் இடமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

The post பகாங்கில் காதலியின் 2 வயது மகனை அடித்துக் கொன்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

நயினாதீவு கடலில் விழுந்து பாடசாலை அதிபர் உயிரிழப்பு

Next Post

ட்ரம்பின் முடிவுக்காகக் காத்திருக்கும் எண்ணெய் சந்தை! அமெரிக்காவால் அதிகரிக்கும் தடைகள்

Next Post
ட்ரம்பின் முடிவுக்காகக் காத்திருக்கும் எண்ணெய் சந்தை! அமெரிக்காவால் அதிகரிக்கும் தடைகள்

ட்ரம்பின் முடிவுக்காகக் காத்திருக்கும் எண்ணெய் சந்தை! அமெரிக்காவால் அதிகரிக்கும் தடைகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin