அமெரிக்கக் கடற்படையின் முற்றுகையால் கிட்டத்தட்ட 60 மில்லியன் பீப்பாய் ஈரானியக் கச்சா எண்ணெய் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் டேங்கர் டிராக்கர்ஸ்.காம் (TankerTrackers.com) (வெளியிட்ட கணக்கீட்டின்படி, இதன் மூலம் கிடைக்கும் சுமார் 6 பில்லியன் டொலர் மதிப்பிலான எண்ணெய் வருவாய் தற்போது ஈரானை சென்றடையவில்லை என்று கூறியுள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய போர்நிறுத்தம் குறித்த முடிவு நெருங்கிவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அமெரிக்க கருவூலமும் வெளியுறவுத் துறையும் ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் மூலம் அதிகபட்ச அழுத்தத்தை கொடுக்கும் தங்கள் முயற்சிகளைத் தொடர்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.
சாதகமான நிபந்தனை
ஈரானைப் பேச்சுவார்த்தைக்குக் கொண்டு வந்து சாதகமான நிபந்தனைகளைப் பெறும் முயற்சியில், அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் மற்றும் முற்றுகையின் மூலம் நிதி அழுத்தத்தை அதிகரித்து வருகிறது.
ஒப்பந்தத்தின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக, வெள்ளிக்கிழமை அன்று தனது ஆலோசகர்களைச் சந்திக்கவிருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.
இந்நிலையில் நிபந்தனைகள் இன்னும் எட்டப்படவில்லை என்று ஈரான் கூறியபோதிலும், அவர் ஒரு இறுதி முடிவை எடுப்பார் என அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், அமெரிக்கப் படைகள் ஈரானுக்கு எதிரான முற்றுகையைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றன.
மே 29 நிலவரப்படி, ஈரானியத் துறைமுகங்களுக்குள் எந்த வர்த்தகமும் நுழையவோ வெளியேறவோ கூடாது என்பதை உறுதி செய்வதற்காக மொத்தம் 115 வர்த்தகக் கப்பல்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாக சென்ட்காம் (CENTCOM) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
