வெசாக் வாரத்தை முன்னிட்டு, மே மாதம் 30, 31 மற்றும் ஜூன் மாதம் 01 ஆகிய திகதிகளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகள், விலங்குகளை அறுக்கும் இடங்கள் (கொல்களங்கள்) மற்றும் சுப்பர் மார்க்கெட்டுகளில் (பல்பொருள் அங்காடிகளில்) இறைச்சி விற்பனை முற்றாக நிறுத்தப்படவுள்ளதாகப் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
அதேபோல், குறித்த தினங்களில் மதுபான விற்பனை நிலையங்கள், பந்தய நிலையங்கள் (Betting Centres) மற்றும் சூதாட்ட விடுதிகள் (Casino) என்பனவும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

