Last Updated:
பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதிய விபத்து குறித்து அறிந்து தனது இதயம் நொறுங்கிப் போனதாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியம் நாட்டில் பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு பெல்ஜியத்தில் உள்ள பக்கென்ஹவுட் நகரில் பள்ளிக்கு சொந்தமான பேருந்து ஒன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தை பேருந்து கடந்து செல்ல முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த ரயில் பேருந்து மீது வேகமாக மோதியது.
இதில், பள்ளிப் பேருந்து தூக்கி வீசப்பட்டது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். அவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதிய விபத்து குறித்து அறிந்து தனது இதயம் நொறுங்கிப் போனதாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
May 27, 2026 10:38 AM IST