சிவபெருமானை வழிபடுவதற்கு ஏற்ற நாளாக திங்கட்கிழமை, பிரதோஷம், சிவராத்திரி, பெளர்ணமி ஆகிய தினங்கள் சொல்லப்படுகிறது. இதைத் தாண்டி தினமும் எளிமையான முறையிலேயே சிவபெருமானை வழிபட்டு வந்தால், சிவனின் அருளையும், அளவில்லாத நன்மைகளையும் பெற முடியும். சிவபெருமானை எளிமையான முறையில் வழிபடும் முறையை தெரிந்து கொள்ளலாம்.
சிவனை வழிபடும் முறை :
1. காலை எழுந்த உடன் குளித்து சுத்தமான உடை அணியுங்கள். வழிபடும் இடத்தையும் சுத்தம் செய்யுங்கள்.
2. சிவனை மனதில் நினைத்து, உங்கள் பெயர், கோத்திரம் சொல்லி, இந்த வேண்டுதலுக்காக வழிபாடு செய்கிறேன் அல்லது இத்தனை நாட்கள் தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்கிறேன் என சங்கல்பம் செய்து வழிபாட்டை துவக்குங்கள்.
3. நெற்றியில் திருநீறு அணிந்து, சிவ சிந்தனையுடன் வழிபாட்டினை துவக்க வேண்டும்.
4. “ஓம் நம:சிவாய” என்ற பஞ்சாட்சர மந்திரத்தை சொல்லி சிவனை மனதில் ஆவாஹனம் செய்யுங்கள்.
5. சிவலிங்கத்திற்கு தண்ணீர், பால், தயிர், தேன், நெய், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யுங்கள்.
6. சுத்தமான நீரால் சிவலிங்கத்தை கழுவி, வில்வ இவை, பூக்கள் கொண்டு அலங்காரம் செய்யுங்கள்.
7. தூபம், தீபம் காட்டி நைவேத்தியம் படைத்து, ஆரத்தி காண்பித்து, பிரார்த்தனை செய்யுங்கள்.
8. “ஓம் நம: சிவாய” மந்திரத்தை 108 முறை அல்லது உங்கள் வசதிக்கு ஏற்ப ஜபிக்கவும்.
9. மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரையிலான பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபட்டால் சகல பாவங்களும் நீங்கும்.
10. சிவனின் அருளை விரைவாக பெறுவதற்கு மிக சிறந்த வழி ருத்ராபிஷேகம் ஆகும். ருத்ராபிஷேகம் செய்வதும், அந்த யாகத்தில் கலந்து கொள்வது வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க வழியை அருளக் கூடியதாகும்.
சிவ வழிபாட்டின் போது செய்ய வேண்டியவை :
– தினமும் அல்லது திங்கட்கிழமை சிவனை தொடர்ந்து வழிபடுங்கள்.
- வில்வ இலை சமர்பித்து அல்லது வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
- சைவ உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.
- அன்பு, பொறுமை, சத்தியம், ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.
- உங்களின் வேண்டுதலை முன் வைத்து மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.
- சிவலிங்கத்தை தொடக் கூடாது.
- பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாதீர்கள்.
- பொய் பேசுதல், கோபம், பிறரை நிந்தனை செய்யாதீர்கள்.
- வழிபாட்டிலும், மந்திர ஜபத்திலும் அலட்சியம் காட்டாதீர்கள்.
சிவ வழிபாட்டில் செய்யக் கூடாதவை :
– அசுத்தமான இடத்தில் வழிபாடு செய்யக் கூடாது.
- சிவலிங்கத்தை தொடக் கூடாது.
- பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாதீர்கள்.
- பொய் பேசுதல், கோபம், பிறரை நிந்தனை செய்யாதீர்கள்.
- வழிபாட்டிலும், மந்திர ஜபத்திலும் அலட்சியம் காட்டாதீர்கள்.
சொல்ல வேண்டிய ஸ்லோகம் :
“நகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்கராகாய மஹேஸ்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை நகாராய நமச்சிவாய”
இது ஆதிசங்கரரால் அருளப்பட்ட நமச்சிவாய ஸ்லோகம். இந்த மந்திரத்தை மனதார உச்சரித்து சிவனை நினைத்து தியானம் செய்து வழிபடலாம். முடிந்தவர்கள் சிவ கவசம், லிங்க அஷ்டோத்திரம், சிவ சகஸ்ரநாமம் ஆகியவற்றை படித்து வழிபடலாம்.




