• Login
Wednesday, May 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இன்ஸ்டாவில் வரும் புதிய வசதி: பதிவிட்ட பின்னரும் ஸ்டோரியைத் திருத்தலாம்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
May 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இன்ஸ்டாவில் வரும் புதிய வசதி: பதிவிட்ட பின்னரும் ஸ்டோரியைத் திருத்தலாம்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
இன்ஸ்டாவில் வரும் புதிய வசதி: பதிவிட்ட பின்னரும் ஸ்டோரியைத் திருத்தலாம்!

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு வரவிருக்கும் புதிய ‘எடிட் ஸ்டோரி’ வசதியால், ஏற்கனவே பதிவேற்றப்பட்ட ஸ்டோரியிலும் திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.

சமூக வலைத்தளங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராம், பயனர்களைக் கவர்வதற்காகப் புதிய புதிய அம்சங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தான் பதிவிட்ட பிறகும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளைத் திருத்தும் புதிய வசதியை அந்நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

தற்போது, பதிவிட்ட ஸ்டோரியில் ஏதேனும் எழுத்துப் பிழை அல்லது தவறான டேக் இருந்தால், அதை நீக்கிவிட்டு மீண்டும் பதிவேற்ற வேண்டிய நிலை உள்ளது. ஆனால் புதிய ‘எடிட் ஸ்டோரி’ அம்சம் வரும் பட்சத்தில், பதிவிட்ட பின்னரும் அதில் நேரடியாகத் திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஒரு ஸ்டோரியைத் திருத்தத் தொடங்கினால், அதன் அசல் பதிப்பு நீக்கப்பட்டு, அதற்குக் கிடைத்த லைக்குகள், ரியாக்ஷன்கள் அனைத்தும் மீட்டமைக்கப்படும். இந்த அம்சம், தற்போது சில ஐபோன் பயனர்களிடம் மட்டுமே சோதனை செய்யப்பட்டு வருகிறது; விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல, வாட்ஸ்அப் பயன்பாட்டிலும் புதிய தனியுரிமை வசதி ஒன்று விரைவில் அறிமுகமாகவிருக்கிறது. வாட்ஸ்அப்பின் ‘ஸ்டேட்டஸ்’ பகிர்வுக்கான தனியுரிமை விருப்பங்களை மேம்படுத்தும் வகையில், இன்ஸ்டாகிராமின் ‘நெருங்கிய நண்பர்கள்’ அம்சத்தை ஒத்த வசதியை அந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது.

இந்தப் புதிய அம்சத்தின் மூலம், பயனர்கள் தங்களின் ஸ்டேட்டஸை அனைத்து தொடர்புகளுடனும் பகிராமல், தாங்கள் விரும்பும் குறிப்பிட்ட நண்பர்கள், குடும்பத்தினர், அல்லது சக பணியாளர்கள் போன்றோருக்கு மட்டும் தனித்தனியாகப் பகிர முடியும்.

இதற்காக, ‘நெருங்கிய நண்பர்கள்’ என ஒரு தனிப் பட்டியலை உருவாக்கிக் கொள்ளலாம்; மேலும், பல்வேறு பிரிவுகளுக்கென தனித்தனி பட்டியல்களையும் (கஸ்டம் ஆடியன்ஸ்) உருவாக்கி, ஒவ்வொரு ஸ்டேட்டஸையும் எந்தெந்தப் பட்டியலினருடன் பகிர்வது எனத் தேர்ந்தெடுக்கலாம்.

இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பீட்டா பதிப்புகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது; வரும் வாரங்களில் பொதுமக்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

Previous Post

மோடியை சந்திக்கும் முதலமைச்சர் விஜய் – ஐபிசி தமிழ்

Next Post

மலையேறும் இளம் வீராங்கனை நூர் இஸ்ஸாதியின் வழக்கை திடீர் மரணம் என காவல்துறை வகைப்படுத்தியுள்ளது | Makkal Osai

Next Post
மலையேறும் இளம் வீராங்கனை நூர் இஸ்ஸாதியின் வழக்கை திடீர் மரணம் என காவல்துறை வகைப்படுத்தியுள்ளது | Makkal Osai

மலையேறும் இளம் வீராங்கனை நூர் இஸ்ஸாதியின் வழக்கை திடீர் மரணம் என காவல்துறை வகைப்படுத்தியுள்ளது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin