பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் கலந்த நீர் அல்லது பூண்டு, மிளகாய் கரைசல் போன்ற இயற்கை பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம். மேலும், பழைய காய்கறி கழிவுகள், தேயிலை தூள், முட்டை ஓடு போன்றவற்றை உரமாக மாற்றி பயன்படுத்தினால் செலவும் குறையும், மகசூலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக தக்காளி, மிளகாய், வெண்டை போன்ற செடிகளில் காய்கள் அதிகமாக வர கிளைகளை அவ்வப்போது வெட்டி பராமரிப்பது நல்ல பலன் தரும் என கூறப்படுகிறது. சரியான முறையில் பராமரித்தால் சிறிய மாடித்தோட்டத்திலிருந்தே தினசரி தேவைக்கான காய்கறிகளை எளிதில் பெற முடியும் என தோட்டக்கலை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

