தமிழக அரசியல் வரலாற்றில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்து வந்த பாரம்பரியக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, தனது முதல் தேர்தலிலேயே அரியணை ஏறியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.
வெறும் சினிமாப் புகழை மட்டுமே நம்பி களமிறங்காமல், ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியைப் போல அவர் வகுத்த வியூகங்கள் இன்று அவரைத் தமிழகத்தின் முதலமைச்சராக அரியணையில் அமர்த்தியிருக்கின்றன.
இந்திய அரசியல் வரலாற்றிலேயே முழுக்க முழுக்க டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகப் பிரச்சாரங்களை முதன்மையாகக் கொண்டு, இளைஞர்களையும் பெண் வாக்காளர்களையும் தன்பக்கம் ஈர்த்த விஜய்யின் இந்த வியூகங்கள் முன்னணி அரசியல் ஆய்வாளர்களயே வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
இந்த வெற்றிக்கு பின்னால் விஜய்யின் தனிப்பட்ட உழைப்பு மட்டுமன்றி, திரைக்குப் பின்னால் இருந்து இயங்கிய ஒரு முக்கிய நபரின் தேர்தல் சாணக்கியத்தனமும் ஒளிந்திருக்கிறது.
விஜய்யின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் அந்த நபர் யார், அவர் வகுத்த துல்லியமான வியூகங்கள் என்ன என்பது தொடர்பில் விரிவாக எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

