பணக்கார கோயில் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கேரளாவில் உள்ள ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் தான். இது இந்தியாவின் பணக்கார கோயிலாகக் கருதப்படுகிறது. அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் ₹1.2 டிரில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள புதையல்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாணயங்கள், நகைகள் மற்றும் சிலைகள் உட்பட சுமார் 1,500 டன் தங்கம் இங்கு இருப்பதாக நம்பப்படுகிறது. 2011-ஆம் ஆண்டில், கோயிலின் சில ரகசியப் புதையல்கள் வெளிப்படுத்தப்பட்டபோது, இக்கோயில் உலகம் முழுவதும் கவனத்தையும் ஈர்த்தது.


