• Login
Saturday, May 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பாலிங்கில் பல நாட்களாக நின்றிருந்த ‘புரோட்டான் வீரா’ கார்! உள்ளே அழுகிய நிலையில் கிடந்த சடலம்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 23, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பாலிங்கில் பல நாட்களாக நின்றிருந்த ‘புரோட்டான் வீரா’ கார்! உள்ளே அழுகிய நிலையில் கிடந்த சடலம்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

கெடா, பாலிங் (Baling) மாவட்டத்தில் உள்ள தாவார் (Tawar) பகுதியில், கடந்த சில நாட்களாகப் பூட்டப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டிருந்த புரோட்டான் வீரா (Proton Wira) காரின் முன்பக்கப் பயணியர் இருக்கையிலிருந்து அழுகிய நிலையில் மர்ம சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.

ஜாலான் ஜெராட் சினா (Jalan Jerat Cina) என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்தக் காரில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து இந்தத் துயரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று, பாலிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் உதவி தீயணைப்பு கண்காணிப்பாளர் சுல்கைரி மாட் தான்ஜில் தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் சுமார் 12.15 மணியளவில் தீயணைப்புத் துறைக்குக் காரின் பூட்டை உடைத்து உதவி செய்யக் கோரி அவசர அழைப்பு வந்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து, பூட்டப்பட்டிருந்த கதவுகளை அதிரடியாகத் திறந்தனர்.

காரின் முன்பக்கப் பயணியர் இருக்கையில் (Front Passenger Seat) உடல் முற்றிலும் அழுகிய நிலையில் ஒரு நபர் இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது.

அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அளித்த தகவலின்படி, சம்பந்தப்பட்ட அந்தப் புரோட்டான் வீரா கார் கடந்த வியாழக்கிழமை (மே 21) முதலே அதே இடத்தில் நகராமல் நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அத்தோடு காரைச் சுற்றி மிகக் கடுமையான தாள முடியாத துர்நாற்றம் வீசிய பிறகே, உள்ளே ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளதை உணர்ந்து பொதுமக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

உயிரிழந்த நபர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் மற்றும் அவரது வயது போன்ற எந்தவொரு முதற்கட்ட விபரங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை. தீயணைப்புத் துறையினரின் இந்த மீட்பு நடவடிக்கை மதியம் 2.25 மணியளவில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சடலம் மற்றும் கார் ஆகியவை மேல் நடவடிக்கைக்காகப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

காரின் உள்ளே இருந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவர் கொலை செய்யப்பட்டு காரில் அடைக்கப்பட்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பாலிங் மாவட்டப் போலீசார் தற்போது தீவிர விசாரணையைத் முடுக்கிவிட்டுள்ளனர்.



Read More

Previous Post

Richest Temples | இந்தியாவில் எந்த கோயிலில் தங்கம் அதிகம் உள்ளது? பணக்கார கோவில்கள் எவை? | வணிகம் போட்டோகேலரி

Next Post

அறிவிப்பு பலகையையும் பொருட்படுத்தாது கோவில் காணியில் குப்பைகளை வீசும் அவலம்!

Next Post
அறிவிப்பு பலகையையும் பொருட்படுத்தாது கோவில் காணியில் குப்பைகளை வீசும் அவலம்!

அறிவிப்பு பலகையையும் பொருட்படுத்தாது கோவில் காணியில் குப்பைகளை வீசும் அவலம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin