கிழக்கு மாகாணத்தில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெருமளவிலான காணி ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் காணி ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதற்காக, பிரதி காவல்துறை மா அதிபர் ஒருவர் தலைமையிலான விசேட காவல்துறை குழுவொன்று அமைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்ட செயலகத்தில் நேற்று (22) நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
அபிவிருத்தி செய்யப்படும்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி கிழக்கு மாகாணத்தில் பெருமளவிலான காணி ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளது. இதனால் பிராந்தியத்தில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. இத்தகைய சட்டவிரோத செயல்களுக்கு இனிமேலும் இடமளிக்க முடியாது.

கிழக்கு மாகாணத்தில் தற்போது இடம்பெற்று வரும் சட்டவிரோத காணி நிரப்புதல் மற்றும் அத்துமீறல்களை எதிர்காலத்தில் முழுமையாகத் தடுக்க வேண்டும்.
மகாவலி அதிகார சபையினால் ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டு, இதுவரை எந்தவொரு திட்டமும் முன்னெடுக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ள வணிக மதிப்புமிக்க காணிகளை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்கும்.
இந்த காணிகள் அனைத்தும் மாவட்டச் செயலாளர்கள் அல்லது பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, பொதுமக்களின் நலனுக்காக முறையான திட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும்“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

