• Login
Friday, May 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மாகாண சபைத் தேர்தல்களை இவ்வாண்டு நடத்த முடியாது – டில்வின் சில்வா – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
May 22, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மாகாண சபைத் தேர்தல்களை இவ்வாண்டு நடத்த முடியாது – டில்வின் சில்வா – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
மாகாண சபைத் தேர்தல்களை இவ்வாண்டு நடத்த முடியாது – டில்வின் சில்வா

2017 முதல் மாகாண சபைகள் செயலிழந்து கிடக்கின்றன. புதிய தேர்தல் முறைமை காரணமாக சட்டத் தடை ஏற்பட்டுள்ளதால் தேர்தல் ஆணைக்குழு தேர்தல்களை நடத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கிறது.

மாகாண சபைத் தேர்தல்களை இவ்வாண்டு நடத்த முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். 

நாட்டில் தற்போதைய நிலைமை காரணமாகவே இவ்வாறு நடைமுறையில் சாத்தியமில்லை என்று கூறியுள்ள அவர், அடுத்த ஆண்டே இத்தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்று ஆங்கில பத்திரிகைக்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு முதல் மாகாண சபைகள் செயலிழந்து கிடக்கின்றன. தேசிய மக்கள் சகதியின் தேர்தல் அறிக்கை பிரதேச அதிகாரப் பகிர்வு, அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் நிலுவையிலுள்ள மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. 

ஆனால், தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய சட்டம் காரணமாக எழுந்துள்ள சட்டத் தடையால், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தேர்தல் ஆணைக்குழுவுக்குக் கடினமாக உள்ளது.

2017 ஆம் ஆண்டின் மாகாண சபைகள் தேர்தல் (திருத்தம்) சட்டம் எண் 17, கலப்பு உறுப்பினர் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையை அறிமுகப்படுத்தியது: 50% பேர் வட்டாரங்களிலிருந்தும், 50% பேர் விகிதாசாரப் பட்டியல்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 

இதற்கான அறிக்கையை எல்லை நிர்ணய ஆணைக்குழு தயாரித்து 2018 ஆம் ஆண்டில் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டது. கட்சிகளுக்கிடையிலான அரசியல் உடன்பாடு இல்லாததால் அது ஒப்புதல் பெறவில்லை.

புதிய முறைமையின் கீழான எல்லை நிர்ணயம் சட்ட ரீதியாக சவாலாகவும், நேரம் எடுப்பதாகவும் இருந்தால், தேர்தல்களை நடத்துவதற்குப் பழைய தேர்தல் முறைமையை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. 

இதற்கிடையில், எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான விடயத்தை ஆராய்ந்து பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் ஒரு பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

இரண்டு இடங்களுக்கு ஜூன் 18-ல் மாநிலங்களவை இடைத்தேர்தல் : தமிழ்நாட்டில் யாருக்கு வாய்ப்பு? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

DECODE | IRAN WAR – US Vs ISRAEL NOW | கறாராக பேசிய Trump… நெதன்யாகு போட்ட திடீர் செக்!

Next Post
DECODE | IRAN WAR – US Vs ISRAEL NOW | கறாராக பேசிய Trump… நெதன்யாகு போட்ட திடீர் செக்!

DECODE | IRAN WAR - US Vs ISRAEL NOW | கறாராக பேசிய Trump... நெதன்யாகு போட்ட திடீர் செக்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin